குழந்தைகளின் ஆபாச வீடியோ.. யூடியூபர் திவ்யா கள்ளச்சியின் அசிங்கமான செயல்..சமூக ஆர்வலர் பகீர் புகார்!

சென்னை: சோஷியல் மீடியாவில் கார்த்திக் ஐ லவ் யூ.. கார்த்திக்கு மாமா.. என கார்த்திகை தேடி அலைந்து பிரபலமானவர் தான் திவ்யா கள்ளச்சி. இவர் கார்த்திக், தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக அடிக்கடி வீடியோவில் பேசிய அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொள்வார். அந்த வகையில் சமூக ஆர்வலர் ஒருவர், திவ்யா கள்ளச்சி குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்து வருவதாக ஆதாரத்துடன் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலராக சித்ரா இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், நான், தனியாக youtube சேனல் ஒன்றை நடந்து வருகிறேன். இதில் 2023 ஆம் ஆண்டு என்னுடைய சேனலை யாரோ ஹேக் செய்து, என் வருமானத்தை 2 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டார்கள். ஹேக் செய்தது யார் என்று தனியாக ஒரு அட்மினை நியமித்து அந்த பணம் எங்கே சென்று என்று விசாரித்த போது. அது திவ்யா கள்ளச்சி என்கிற மெயில் அக்கவுண்டில் அவருக்கு சென்று இருப்பது எனக்கு தெரியவந்தது.

youtuber divya kallachi rowdy baby suriya

திவ்யா கள்ளச்சி: இதைத் தொடர்ந்து திவ்யா கள்ளச்சியின் Facebook, instagram என அவரின் அனைத்து வீடியோவையும் பார்த்த போது, அவர் சமுதாயத்திற்கு சீர்கேடு விளைவிக்கும் அனைத்து செயல்களையும் செய்து வருவதை கண்டுபிடித்தேன். இது குறித்து அவரிடம் பேசுவதற்காக அவரது வீட்டுக்கு சென்றேன். அப்போது எனக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்த இடத்திலிருந்து நான் வெளிய வந்தபோது வீட்டில் இருந்து இரண்டு மூன்று குழந்தைகள் என்னிடம் ஓடிவந்தார்கள். அப்போது அவர்கள் சொன்னது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

பாலியல் ரீதியாக கொடுமை: அதாவது, அந்த குழந்தையை இந்த வீட்டில் இருக்கும் பெண்ணான திவ்யா, அடைத்து வைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதாகவும், பெரிய பெரிய பணக்காரர்களுக்கு எங்களை அனுப்பி வைப்பதாகவும் அதன் மூலமாக பணம் சம்பாதிப்பதாகவும் கூறினார்கள். அதுமட்டுமில்லாமல், சிறுவர்களை ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு இதற்காகவே வைத்திருக்கும் whatsapp குரூப்பில் அந்த வீடியோக்களை ஷேர் செய்து வருவதாகவும், அதில் யாருக்கு யார் தேவைப்படுகிறார்களோ அவர்களை அனுப்பி வைப்பார்கள் என்று சொன்னதும் நான் அதிர்ந்து போனேன்.

பல ஆபாச வீடியோ: அதையடுத்து, திவ்யாவின் போனை பிடிங்கி பார்த்த போது அதில் பல குழந்தைகளின் ஆபாச வீடியோ இருந்தது. அதுமட்டுமில்லாமல் ரௌடிபேபி சூர்யா, சிக்கந்தர், திருச்சி சாதனா என இன்னும் பல யூடியூபரின் ஆபாச வீடியோவும், அவர்கள் ரேட் பேசும் ஆடியோ என 200க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருக்கிறது. இதைப்பார்த்து அதிர்ந்து போன நான், சம்பந்தப்பட்டவர்களை வைத்து விருதுநகர் மாவட்ட போலீஸ் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

கொலை மிரட்டல்: இதைத்தொடர்ந்து எனக்கு தொடர்ந்து தீபா என்கின்ற பெண்ணிடம் இருந்து தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது. அவர்களிடம் இருந்து மட்டுமில்லாமல் ரவுடி பேபி சூர்யா, மற்றும் சிக்கந்தரமிடமிருந்து எனக்கு கொலை மிரட்டல்கள் வந்து கொண்டே இருக்கிறது.மேலும், இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திவ்யா கள்ளச்சி இப்போது தலைமறைவாக இருக்கிறார்.அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால், தினமும் யூடியூபில் வீடியோ மட்டும் வருகிறது. அவர் மட்டும் மாட்டினால், பல யூடியூபர்கள் மாட்டுவார்கள், பல உண்மைகள் வெளியே வரும் என்பதால், திவ்யாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காவல்துறை கேட்டுக்கொள்வதாக சமூக ஆர்வலர் சித்ரா அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X