அப்போ ஓவியா.. இப்போ திவ்யா.. ஆபாச பேச்சு.. பயில்வான் ரங்கநாதன் மீது புகார் கொடுத்த சமூக ஆர்வலர்!

சென்னை: பெண்களுக்கு எதிராக ஆபாச பேச்சுக்களை பேசி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் அவர் மீது உடனடியாக நடவடிக்கைக் எடுக்கக் கோரி புகார் கிளம்பி உள்ளது.

நடிகரும், யூடியூப் பிரபலமுமான பயில்வான் ரங்கநாதன் நடிகைகள் குறித்தும் பெண்கள் குறித்தும் தொடர்ந்து ஆபாச கருத்துக்களை முன் வைத்து பேசி வருகிறார் என சமூக ஆர்வலர் திவ்யா பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னதாக நடிகை ஓவியா பற்றி பயில்வான் ரங்கநாதன் பேசி போட்ட வீடியோவுக்கு ஓவியா ட்வீட் போட்டு பதிலடி கொடுத்திருந்தார்.

பயில்வான் ரங்கநாதன்

பயில்வான் ரங்கநாதன்

தமிழ் சினிமாவில் பல படங்களில் துணை நடிகராக நடித்துள்ள பயில்வான் ரங்கநாதன் யூடியூப் சேனலை தொடங்கி நடிகைகள் செய்யும் லீலைகள் என ஏகப்பட்ட வீடியோக்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி வருகிறார். அவரது வீடியோவுக்கு சினிமாவில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஓவியா பதிலடி

ஓவியா பதிலடி

நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து பட வாய்ப்புகளை பிடிப்பதாக மிகவும் மோசமான விமர்சனத்தை முன் வைத்த பயில்வான் ரங்கநாதன் ஓவியா பற்றியும் அவதூறு கருத்துக்களை பேசி வீடியோ வெளியிட்ட நிலையில், நடிகை ஓவியா அவரது கருத்து முற்றிலும் பொய்யான ஒன்று, இதே போல போட்டுக் கொண்டு இருந்தால் நடப்பதே வேறு என அவரது வீடியோ ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்துப் போட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட பலரும் ஓவியாவின் கருத்துக்கு ஆதரவு அளித்தனர்.

சமூக ஆர்வலர் திவ்யா

சமூக ஆர்வலர் திவ்யா

சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பெண்கள் குறித்து தொடர்ந்து அருவருக்கத்தக்க வகையில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் சமூக ஆர்வலர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

கமிஷ்னரிடம் புகார்

கமிஷ்னரிடம் புகார்

சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் திவ்யா நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், "ட்விட்டர், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பெண்கள் குறித்து அருவருக்கதக்க வகையில் தகாத வார்த்தைகளால் தொடர்ந்து பேசி வருகிறார்.

பெண்களுக்கு எதிராக

பெண்களுக்கு எதிராக

அரசியல் மட்டுமல்லாமல் சமூகத்தில் ஏற்பட்டு வரும் அநீதிகளுக்கு எதிராகப் பேச பெண்கள் தற்போது தான் முன்னுக்கு வர துவங்கியுள்ளதாகவும், அவர்களை இதுபோன்ற நபர்கள் தடுக்கும் எண்ணத்துடன் சொந்த விஷயங்களைக் குறிப்பிட்டு அருவருக்கத்தக்க வகையில் பேசி வருவது ஏற்புடையது அல்ல. அதுமட்டுமின்றி பயில்வான் ரங்கநாதன் போன்று பலரும் பெண்களுக்கு எதிரான அவதூறு கருத்துக்களை பரப்பி, பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கத் துவங்கியுள்ளதால், இதை உடனடியாக தடுக்க வேண்டியது அவசியம். பயில்வான் ரங்கநாதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அருவருக்கத்தக்க வகையில்

அருவருக்கத்தக்க வகையில்

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சமூக ஆர்வலர் திவ்யா, ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை எதிர்கொள்ள பெண்கள் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் சொந்த விஷயங்களைக் கிளறி அருவருக்கத்தக்க வகையில் பயில்வான் ரங்கநாதன் பேசி வருகிறார்.

முதலமைச்சர் சொன்னாரே

முதலமைச்சர் சொன்னாரே

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில், பெண்களின் கருத்து சுதந்திரத்தை ஒடுக்க எண்ணி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் பேசி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைப் போன்று இன்னும் பெண்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவிடும் நபர்களைக் கண்டறிந்தும் உரிய நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X