தனுஷூக்கு நடந்தது பொம்மை கல்யாணம்? அவருக்கு தேவை பொண்டாட்டி இல்லை நர்ஸ்.. விமர்சகர் கருத்து!

சென்னை: நடிகர் நெப்போலியன் மகன் தனுஷுக்கு நவம்பர் 7ந் தேதி ஜப்பானில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. ஜப்பானே வியந்து போகும் அளவிற்கு நடந்த இந்த திருமண வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், சமூக விமர்சகர் ஒருவர் நெப்போலியன் மகனுக்கு நடந்தது பொம்மை கல்யாணம் என பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

நெப்போலியன் மகன் தனுஷ் மற்றும் அக்ஷயா திருமணம் தான் தற்போது சோஷியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனுஷ் இல்லற வாழ்க்கையில் எப்படி ஈடுபடுவார் என்றும், பணத்தால் ஒரு பெண்ணின் வாழ்க்கையை வீணாக்கி விட்டார்கள் என்றும் சிலர் இணையத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலர், பெண் அக்ஷயாவிற்கே இந்த திருமணத்தில் முழு சம்மதம் இருக்கும் போது யாருக்கு என்ன பிரச்சனை என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

nepoleon dhanush akshaya

இதெல்லாம் சினிமா வசனம்: இந்நிலையில், Aram Naadu youtube சேனலுக்கு பேட்டி அளித்துள்ள அரசியல் விமர்சகர் மற்றும் சமூக ஆர்வலர் கிருஷ்ணவேல், இந்த பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்ததை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது.ஒரு திருமணம் எதற்காக செய்து வைக்கப்படுகிறது. ஆண் பெண் இருவரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் திருமணம் செய்து வைக்கப்படுகிறது. சிலர் உடல் தேவை மட்டும் தான் வாழ்க்கையா, இருமனங்கள் இணைந்தால் போதாதா என்று சொல்லுகிறார்கள், இந்த பேச்சு சினிமாவிற்கு மட்டும் தான் சாத்தியம் ஆகும். வாழ்க்கைக்கு இது சாத்தியம் ஆகாது.

யாருக்கு என்ன பலன்: மாற்றுத்திறனாளியான, எழுந்து நடக்க முடியாது நிலையில் இருக்கும் அவரை கவனித்துக்கொள்ள ஒரு நர்ஸ் தான் தேவையே தவிர மனைவி இல்லை. பெரிய ஐடி நிறுவனத்தை நடத்தி வரும் நெப்போலியனால் ஏன் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எதற்கு இந்த பொம்மை கல்யாணம், இந்த கல்யாணத்தால் யாருக்கு என்ன பயன். இது அந்த பெண்ணின் வாழ்க்கையை சீரழிப்பது என்பது எந்த வகையில் நியாயம், அந்த பெண்ணின் சம்மதத்தோடு தான் திருமணம் நடந்தது என்கிறார். முதலில் அந்த பெண் தானாக சம்மதித்தாரா, இல்லை நிர்பந்திக்க பட்டாரா, இல்லை எந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்த திருமணத்திற்கு சம்மதித்தார் என்பதை முதலில் பார்க்க வேண்டும்.

சொத்து எதற்கு: அந்த பெண் அக்ஷயாவால் தனுஷிடம் மனம் விட்டுக்கூட பேச முடியாது, மனம் விட்டு பேசுவதற்கு கூட ஆள் இல்லாத நிலையில் எதற்கு இந்த திருமணம், இந்த திருமணத்தின் மூலம் எதை சாதித்தார் நெப்போலியன். மேலும், இந்த திருமணத்திற்காக அந்த பெண்ணுக்கு பல கோடி சொத்து எழுதிவைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சொத்தை வைத்துக்கொண்டு அந்த பெண்ணால் என்ன செய்ய முடியும், இப்படி ஒரு திருமணத்தை நெப்போலியன் செய்ததற்கு பதிலாக, தமிழ்நாட்டில் இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களுக்காக ஒரு மையத்தை ஆரம்பித்து இருக்கலாம் அல்லது தனுஷ் பெயரில் ஒரு அறக்கட்டளை ஆரம்பித்து இருக்கலாம். அப்படி செய்து இருந்தால், பத்து தலைமுறைக்கும் நெப்போலியன் மகன் பெயர் பேசப்பட்டு இருக்கும், தமிழ்நாட்டில் விடிவெள்ளியாக நெப்போலியன் இருந்து இருப்பார் என்று சமூக ஆர்வலர் கிருஷ்ணவேல் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X