கமலுக்கு வக்கீல் நோட்டீஸ்.. பூதாகரமாகும் விக்ரம் படத்தின் ‘பத்தல.. பத்தல’ பாடல் பிரச்சனை!

சென்னை: கமல்ஹாசன் எழுதி பாடிய விக்ரம் படத்தின் 'பத்தல பத்தல' பாடலை நீக்க சொல்லி நடிகர் கமலுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகா் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் வரும் ஜுன் 03ம் தேதி வெளிவர உள்ளது.

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியாகி உள்ள விக்ரம் படத்தில் சூர்யா ஸ்பெஷல் கேமியோவாக நடித்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விக்ரம் விழா

விக்ரம் விழா

நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற உள்ளது. தமிழ் சினிமாவின் பல முன்னணி பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்

ஃபர்ஸ்ட் சிங்கிள்

சமீபத்தில் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை கமல்ஹாசன் வெளியிட்டார். அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய 'பத்தல பத்தல' பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால், அந்த பாடலில் இடம்பெற்றுள்ள "ஒன்றியத்தின் தப்பால", "திருடன் கையில் சாவி" உள்ளிட்ட வரிகள் அரசியல் ரீதியாக சர்ச்சையை கிளப்பியது.

திருடன் என

திருடன் என

அந்த திரைப்படத்தில் வரும் "பத்தல பத்தல" என்ற பாடலில் மத்திய அரசை திருடன் என்றும், ஜாதிய ரீதியாக பிரச்சனைகளை தூண்டும் வகையிலும் அமைந்துள்ள வரிகளை நீக்கக் கோரி சென்னை, திருநெல்வேலி மற்றும் வேலூர் மாவட்டங்களில் இருந்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் திரைப்படக் குழுவிற்கு ஆர்.டி.ஐ. செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

வக்கீல் நோட்டீஸ்

வக்கீல் நோட்டீஸ்

நோட்டீஸ் கிடைக்கப் பெற்ற இரண்டு நாட்களுக்குள் நடிகா் கமல்ஹாசனிடமிருந்து பதில் வராவிட்டால் அனைத்து இணைய தளங்களிலும் பதிவேற்றப்பட்ட விக்ரம் படத்தின் "பத்தல பத்தல" பாடலை நீக்கக் கோரி யூடியூப் இந்தியா மற்றும் பிற இணையதளங்களுக்கு முறையாக நோட்டீஸ் அனுப்பப்படும். மேலும் மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தில் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என ஆர்.டி.ஐ. செல்வம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X