‘குடிக்க வேண்டாம்’ அட்வைஸ் பண்ண ரஜினியே இப்படி நடிக்கலாமா? சமூக ஆர்வலர்கள் கேள்வி!
சென்னை: குடிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் பண்ண ரஜினியே ஜெயிலர் படத்தில் இப்படி நடிக்கலாமா என்று சமூகஅர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த் நடிப்பில், நேற்று வெளியான படம் ஜெயிலர்.
நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், விநாயகன், சுனில், யோகிபாபு உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.

ஜெயிலர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜெயிலர் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ரஜினியின் ஸ்டைல், அட்டகாசமான நடிப்பு, பாட்டு, அதிரடியான ஆக்ஷன் என ஜெயிலர் திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த படமாக இருப்பதால், ரஜினி ரசிகர்கள் ஜெயிலர் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
வசூல் பலகோடி: இப்படம் நடப்பு ஆண்டின் மிகப்பெரிய ஓப்பனிங் பெற்ற தமிழ் படமாக மாறியுள்ளது. முதல் நாளில் 70 கோடி வரை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது நாளில் 100 கோடி வரை நெருங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், ரஜினி ரசிகர்களோ, முதல் நாளில் வசூல் 150 கோடியை வசூலித்துவிட்டதாக இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
புகைப்பிடிக்கும் காட்சி இல்லை: இந்நிலையில்,ஜெயிலர் படத்தில் வரும் கிளைமாக்ஸ் காட்சியில் ரஜினி சுருட்டி பிடிக்கும் காட்சியைப் பார்த்து டென்ஷனான சமூக ஆர்வலர்கள். சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு புகைப்பிடிப்பது தான் அவரது தனி ஸ்டைல், ஆனால், அந்த காட்சிக்கு எதிர்ப்பு எழுந்ததை அடுத்து, இனி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிக்கவே மாட்டேன் என்று கூறியிருந்தார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான எந்த படத்திலும் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெறவில்லை.
சமூகஅர்வலர்கள் கேள்வி: அதே போல, ஜெயிலர் இசைவெளியீட்டுவிழாவில் பேசிய ரஜினிகாந்த், குடிப்பழக்கத்தால் நான் பல விஷயங்களை இழந்துவிட்டேன். அந்த பழக்கம் மட்டும் எனக்கு இல்லாமல் இருந்து இருந்தால், இதைவிட உயரத்திற்குச் சென்றிருப்பேன். குடிப்பழக்கம் எனக்கு நானே வைத்துக் கொண்ட சூனியம். குடிப்பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று பேசிய இருந்தார். இவரின் இந்த பேச்சைக் கேட்ட ரசிகர்கள் தலைவரே சொல்லிவிட்டார். இனி குடிக்க மாட்டேன் என்று கூறிவரும் நிலையில், மீண்டும் ஜெயிலர் படத்தில் சுருட்டுப்பிடித்தது சரியா என சமூகஅர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.


Click it and Unblock the Notifications











