twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லிங்குசாமிக்கு ஆதரவு குரல் கொடுத்த வெங்கட்பிரபுவை வறுத்தெடுக்கும் வலைஞர்கள்!

    By Veera Kumar
    |

    சென்னை: அஞ்சான் திரைப்படத்திற்காக இயக்குநர் லிங்குசாமியை கலாய்த்து வந்த சமூக வலைஞர்களின் கோபப்பார்வையில் இப்போது சிக்கி வறுபடுபவர் மற்றொரு இயக்குநர் வெங்கட் பிரபு.

    அஞ்சான் திரைப்படம் வெளியாகும் முன்பு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில், தான் கற்ற மொத்த வித்தையையும் அஞ்சான் படத்தில் இறக்கியுள்ளதாகவும், அதற்கு தக்க டியூன் ஆகியுள்ளதாகவும் இயக்குநர் லிங்குசாமி கூறியிருந்தார். அஞ்சான் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல், டிரெண்டில் இருந்து விலகி இருந்ததால் ரசிகர்கள் கடும் கோபமடைந்தனர்.

    மொத்த வித்தை லிங்குசாமி

    மொத்த வித்தை லிங்குசாமி

    எனவே லிங்குசாமியை டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கலாய்க்க ஆரம்பித்தனர் வலைஞர்கள். டிவி பேட்டியை ஆதாரமாக கொண்டு பல வகைகளிலும், சொல்லப்போனால் கொஞ்சம் அதிகமாகவே தாக்க ஆரம்பித்தனர். ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடந்தால் கூட, 'பாருய்யா மொத்த வித்தையையும் இறக்கி ஆடுறான் பாரு' என்று டிவிட் செய்யும் அளவுக்கு லிங்கு வறுபட ஆரம்பித்தார்.

    வெங்கட்பிரபு ஆதரவு

    வெங்கட்பிரபு ஆதரவு

    இந்நிலையில் லிங்குசாமிக்கு ஆதரவு கரம் நீட்டினார் வெங்கட்பிரபு. அவர் வெளியிட்டுள்ள பதிவில் "நீங்கள் நினைப்பது போல, சினிமா இயக்குவது என்பது சாதாரண விஷயமில்லை. எங்களுக்கு எது சிறந்ததோ அதைச் செய்கிறோம். ஆனால், சில நேரங்களில் அது எடுபடுகிறது, பல நேரங்களில் அது எடுபடாமல் போகிறது. உங்களால் கிண்டல் மட்டுமே செய்ய முடியும். நாங்கள் உங்களைக் கலாய்க்க ஆரம்பித்தால்?உங்களுக்காகத்தான் படம் இயக்குகிறோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், ஒரு நல்ல படத்தை ஏன் வெற்றி அடைய வைக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

    சிக்கினார் வெங்கட்பிரபு

    சிக்கினார் வெங்கட்பிரபு

    இதுபோதாதா இணையதளவாசிகளுக்கு, லிங்குசாமியை மறந்துவிட்டு வெங்கட் பிரபுவை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிட்டனர். வடிவேலு ஒரு படத்தில் சிறுவன் திட்டுவதற்காக கோபப்பட்டு அவனை விரட்டிச் சென்று சிக்கி கிட்னி பறிகொடுப்பாரே அந்த காட்சியையெல்லாம் பதிவிட்டு, வெங்கட்பிரபுவுடன் ஒப்பிட்டு கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.

    எனி ஹெல்ப்?

    எனி ஹெல்ப்?

    சச்சின் திரைப்படத்தில், ஹீரோயின் கேரக்டர் பெயர் ஷாலினி. வடிவேலு, விஜய், ஜெனிலியா இடையே தகராறு நடந்து கொண்டிருக்கும்போது, 'எனி ஹெல்ப் ஷாலினி' என்று ரெஸ்டாரண்டில் இருக்கும் ஒருவர் கேட்பார். அதில் இருந்து பெண்களுக்கு பிரச்சினை என்றால் பந்தா காண்பிக்க உள்ளே வருவோருக்கெல்லாம் இணையதளவாசிகள் எனி ஹெல்ப் ஷாலினி என்று செல்ல பெயர் சூட்டியுள்ளனர்.

    படம் ஓட்டுகிறார்கள்

    படம் ஓட்டுகிறார்கள்

    இப்போது லிங்குசாமியை கலாய்த்ததற்காக உள்ளே நுழைந்த வெங்கட்பிரபுவுக்கு 'எனிஹெல்ப்' என்ற ஹேஸ்டேக் போட்டு கலாய்த்து வருகின்றனர் டிவிட்டர் கீச்சர்கள். பேஸ்புக்கிலோ, மெமெ கிரியேட்டர்ஸ், புதிது புதிதாக பட காட்சிகளை வெட்டி எடுத்து, அதில் லிங்குசாமி, வெங்கட் பிரபு படங்களாக சித்தரித்து ஓட்டி வருகின்றனர். ஒரு படத்தில், குற்றவாளி அழுதான் என்பதற்காக போலீஸ் ஏட்டாக வரும் வடிவேலு அவனை தப்பிக்கவிடுவார். அதற்கு பதிலாக கான்ஸ்டபிள் அர்ஜுனிடம் வடிவேலு மாட்டிக்கொள்வார். வலைஞர்களோ, குற்றவாளியாக லிங்குசாமியையும், வடிவேலுவாக வெங்கட்பிரபுவையும் சித்தரித்து புதிய கேலி சித்திரங்களை உருவாக்கி உலவ விட்டுள்ளனர்.

    English summary
    Social media persons now target director Venkat Prabu instead of Linguswamy in the social media sites.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X