»   »  சமூக வலைதளங்களில் சக்தி படைத்தவர்களாக விளங்கும் பிரபல நடிகர்கள்

சமூக வலைதளங்களில் சக்தி படைத்தவர்களாக விளங்கும் பிரபல நடிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் தொடங்கி அனைத்திற்கும் சமூக வலைதளங்கள் அதிகமாக பயன்படுகின்றன.

சமூக வலைதளங்கள் மூலம் தங்களைப் பற்றிய செய்திகளை நடிகர்கள் உடனுக்குடன் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். மேலும் இதன் மூலமாக தங்கள் படங்களையும் நடிகர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

சமீபகாலமாக பிரபல நடிகர்கள் பலரும் தங்கள் ரசிகர்களுடன் கலந்துரையாடல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். திரையுலகப் பொறுத்தவரை சமூக வலைதளங்களின் பங்கு அதிகமாக உள்ளது.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் மாபெரும் சக்தி படைத்தவர்களாக திகழும் பிரபல நடிகர்கள் சிலரை இங்கே பார்க்கலாம்.

சூப்பர்ஸ்டார் ரஜினி

சூப்பர்ஸ்டார் ரஜினி

திரையுலகில் சூப்பர் ஸ்டாராக விளங்குவது போன்று ட்விட்டரிலும் சூப்பர் ஸ்டாராகத் திகழ்கிறார் நடிகர் ரஜினிகாந்த். சுமார் 22 லட்சத்து 70 ஆயிரம் பேர் ட்விட்டரில் ரஜினியைப் பின்தொடர்கின்றனர். இதுவரை ரஜினி 16 ட்வீட்களை கூட செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனுஷ்

தனுஷ்

மாமனார் ரஜினிக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருக்கிறார் மருமகன் தனுஷ்.ட்விட்டரில் தனுஷைப் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக சமீபத்தில் உயர்ந்துள்ளது, இதற்காக தனது நன்றிகளைத் தெரிவித்து இருக்கிறார் தனுஷ். எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் ட்விட்டரில் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது தனுஷின் வழக்கம்.

சித்தார்த்

சித்தார்த்

நடிகர் சித்தார்த் இந்தப் பட்டியலில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கிறார்.17 லட்சத்திற்கும் அதிகமான பேர் ட்விட்டரில் சித்தார்த்தை பின் தொடர்கின்றனர். ட்விட்டரில் சித்தார்த்தின் நடமாட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

ஆச்சரியமாக இந்தப் பட்டியலில் 4 வது இடத்தைப் பிடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். சுமார் 12 லட்சத்திற்கும் அதிகமானபேர் ட்விட்டரில் சிவகார்த்திகேயனை பின்தொடர்கின்றனர்.

மேடிக்கு 5

மேடிக்கு 5

நடிகர் மாதவன் இந்தப் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்திருக்கிறார். ட்விட்டரில் மேடியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.

 சிம்புவுக்கு 8.84 லட்சம்

சிம்புவுக்கு 8.84 லட்சம்

நடிகர் சிம்புவை 8.84 லட்சம் பேரும், ஜெயம் ரவியை 7.72 லட்சம் பேரும் பின் தொடர்கின்றனர். நடிகர் சூர்யாவை 4 லட்சத்திற்கும் அதிகமான பேர் பின்தொடர்கின்றனர், இதே போன்று நடிகர் விஜயை சுமார் 3.29 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர். நடிகர் ஜீவாவைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.

English summary
Social Media's Top 5 Great Powerful Actors List: Rajini, Dhanush, Siddharth, Sivakarthikeyan And Madhavan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil