»   »  பாடலாசிரியர்களுக்கு சமூகப் பொறுப்பு நிச்சயம் தேவை- வைரமுத்து

பாடலாசிரியர்களுக்கு சமூகப் பொறுப்பு நிச்சயம் தேவை- வைரமுத்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பீப் பாடல் விவகாரத்தில் பாடலாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் சமூகப் பொறுப்பு நிச்சயம் இருக்க வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறியிருக்கிறார்.

சிம்பு குரலில் அனிருத் இசையமைப்பில் சில நாட்களுக்கு முன்னால் வெளியான பீப் பாடல் தமிழக மக்களை மிகவும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

Social Responsibility is Needed to Songwriters - Vairamuthu

இவர்கள் இருவர் மீதும் கோவை போலீசில் மகளிர் அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில் இருவரையும் கைது செய்திட கோவை போலீசார் முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து முன்னணி எழுத்தாளரும்,கவிஞருமான வைரமுத்து கூறும்போது "நான் அந்த பாடலை இதுவரை கேட்கவில்லை. பாடலை கேட்காத நிலையில் என்னால் எந்தவொரு விமர்சனமும் செய்யமுடியாது.

எனினும் எழுத்தாளர்கள் மற்றும் பாடலாசிரியர்களுக்கு நிச்சயம் சமூக பொறுப்புணர்வு தேவை.அவர்கள் தங்களுக்கென்று சில எல்லைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

கருத்து ஆழமுள்ள பாடல்கள் காலப்போக்கில் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்துகிறது" என்று பீப் பாடல் குறித்த விவகாரத்தில் வைரமுத்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

English summary
Beep Song Issue: Lyricist Vairamuthu Says in Recent Interview "Social responsibility is needed to Songwriters".
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil