twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஒருவருக்கு செய்யும் உதவி.. ஏதோ ரூபத்தில் திரும்ப வரும்.. “சீறு“ படத்தின் கதைக்கரு !

    |

    Recommended Video

    SEERU MOVIE POSTER PAKIRI REVIEW | FILMIBEAT TAMIL

    சென்னை : ஒருவருக்கு தேடி போய் உதவி செய்தால், அந்த உதவி ஏதோ ஒரு ரூபத்தில் திரும்ப நம்மைத் தேடி வரும் என்பது தான் சீறு படத்தின் மையக்கதை நல்ல வரவேற்பை பெற்ற படம் நிச்சயம் வெற்றி பெறும்.

    நடிகர் ஜீவா நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் சீறு. இந்த படத்தை றெக்க படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னசிவா இயக்கியுள்ளார். படத்திற்கு டி.இமான் இசையமைத்து இருக்கிறார். சீறு படத்தை பிரபல தயாரிப்பாளர் ஐசரிகணேஷ் தயாரித்து இருக்கிறார். படத்தில் ஜீவாவுடன் ரியா சுமன், நவ்தீப், வருண், சதீஷ், சாந்தினி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர் .

    Socially concerned film is “seeru”

    படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது . படத்தில் சமூகம் சார்ந்த பல கருத்துகள் கூறப்பட்டிருக்கின்றன. மேலும் படத்தில் பெண்களின் எழுச்சி பற்றிய காட்சிகள் அங்கு வரும் வசனங்கள் அனைத்தும் திரையரங்குகளில் கைதட்டை அள்ளி விடுகின்றன.

    கார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்!கார்த்தியின் கைதி இந்தி ரீமேக்.. இந்த 2 ஹீரோக்கள்தான் சாய்ஸ்.. இதில் ஒருவர் கண்டிப்பாக நடிப்பாராம்!

    ஒட்டுமொத்தமாக சீறு படத்தின் கதை கரு நீங்கள் ஒருவருக்கு தேடி போய் உதவி செய்தால் திரும்ப ஏதோ ஒரு ரூபத்தில் அந்த உதவி உங்களை தேடி வந்து சேரும் என்பது தான். இந்த கதை கருவை மைய்யமாக வைத்துத்தான் படத்தின் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் ரத்னசிவா .

    இதற்கு முன்பே இவர் எடுத்த றெக்க படத்திலும் வலுவான சண்டை காட்சிகள் படம் முழுக்க இருக்கும் அதே போல இந்த படத்தின் அழுத்தமான கதைக்கு நடுவே சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் இருக்கின்றன.

    Socially concerned film is “seeru”

    வேல்ஸ் நிறுவனத்தின் தொடர் வெற்றிகளுக்கு இதற்கு முன் வெளியான படத்தில் மூலம் ஒரு சின்ன தடங்கல் இருந்தாலும் சீறு படம் வேல்ஸ் நிறுவனத்தை இம்முறை காப்பாற்றி விட்டது. சரியான தயாரிப்பு மற்றும் விளம்பரம் மூலம் நல்ல படைப்பை கட்டாயம் மக்களிடம் கொண்டு சேர்த்து விடலாம் என படத்தின் தயாரிப்பாளர் நிரூபித்து உள்ளார் .

    படத்தில் பேசப்பட்ட அனைத்து விசயங்களும் மக்களை சரியான அளவில் சென்று சேர்ந்திருக்கிறது. சிலர் சில குறைகளை சொல்லி வந்தாலும் பெரும்பாலான மக்கள் படத்தின் கதை கருவை வெகுவாக பாராட்டி வருகின்றனர் .

    Socially concerned film is “seeru”

    படத்தின் முதல் வில்லனாக காட்டப்படும் வருண் நல்ல மனிதன் என்பதற்கு கதை ஓட்டத்தில் காட்டப்பட்ட காட்சிகளும் அதை தொடர்ந்து உதவி என்ற முக்கியமான விசயம் மனித வாழ்வில் எவ்வளவு முக்கியமானது என்பதற்கு பல காட்சிகள் படத்தில் இருக்கிறது. சீறு கண்டிப்பாக வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸிலும் சீறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Socially concerned film is “seeru”
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X