விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது அதிகாரத் திமிரை.. ஆளும் தரப்பிடம் இருந்து தப்புமா சொடக்கு பாடல்?
சென்னை: தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடல் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ரொம்ப நாளாக நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ் சிவன் ட்விட்டர் பக்கம் வந்தாலே படத்தின் அப்டேட் கேட்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

இந்நிலையில் சொடக்கு பாடல் இன்று வெளியாகியுள்ளது. சொடக்கு மேல சொடக்கு போடுது என் விரல் வந்து நடுத்தெருவில் நின்னு சொடக்கு போடுது என்ற பாடல் அனிருத் இசையில் சும்மா தெறிக்குது.

முன்னதாக வெளியான சொடக்கு பாடல் டீஸரில் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில் வந்து சொடக்கு போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. சொடக்கு பாடலை கேட்டு சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விரட்டி விரட்டி வெளுக்கத் தோணுது அதிகாரத் திமிரை, பணக்கார பவரை தூக்கிப் போட்டு மிதிக்கத் தோணுது என்று பாடல் வரி உள்ளது. இதற்கு என்ன எதிர்ப்பு வரப்போகுதோ?


Click it and Unblock the Notifications











