Sofa boy: விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இப்படி விலை பேசி விற்கிறாரே.. சோபா பாய்க்கு யோகம் தான்!
சென்னை: யூடியூபில் தனது சோபா கடை பற்றி வித்தியாசமாக பேசி புரோமோஷன் செய்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கவர்ந்து வந்த சோபா சிறுவன் முகமது ரசூல் அதிரடியாக விக்னேஷ் சிவன் மற்றும் நெல்சன் உள்ளிட்ட முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த சந்தோஷத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியாகியுள்ள ரகளையான வீடியோ ரசிகர்களை சிரிக்க வைத்து வருகிறது.
சீரியல் மூலம் பிரபலமானவர்கள், யூடியூப் சேனல்கள் மூலம் பிரபலமானவர்கள் என சமீபத்தில் பலரும் சினிமாவுக்கு படையெடுத்து வருகின்றனர். ரித்து ராக்ஸ் யூடியூப் சேனல் மூலம் பிரபலமான ரித்விக் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேரனாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். சர்தார், ஓ2 என பல படங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக மாறியுள்ளார். அவரைத் தொடர்ந்து தற்போது சிறுவன் ரசூல் நெல்சன் இயக்கத்தில் ஒரு படத்திலும் விக்னேஷ் சிவனின் எல்ஐசி படத்திலும் நடிக்க உள்ளார்.

பேசியே சோபாவை விற்கும் திறமை: பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்கு முன்னாடியே அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து ஏதாவது அப்பாவுக்கு சோபா கடையில் அனைத்து வேலைகளையும் பார்த்து கொடுத்துவிட்டு பள்ளிக்குச் சென்று படித்துவிட்டு, பின்னர் வீடு திரும்பியது மீண்டும் நேராக சோபா கடைக்கு வந்து இரவு வரை சோபா விற்பனையில் ஈடுபட்டு வருவதாக சிறுவன் முகமது ரசூல் பேசிய வீடியோக்கள் இணையத்தில் பரவியது. சில பிரபல யூடியூப் சேனல்கள் ரசூலை அழைத்து வந்து பேட்டியும் எடுத்தனர். அதன் விளைவாக அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு இந்த வயதிலேயே கிடைத்துவிட்டது.
எல்ஐசி படத்தில் சோபா பாய்: விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாத ஹீரோவாக நடித்து வரும் எல்ஐசி திரைப்படத்தில் சோபா பாய் ரசூலுக்கு முக்கிய கதாபாத்திரம் கிடைத்திருக்கிறது. அந்த படத்தின் பப்ளிசிட்டி மேனேஜரே இவர்தான் எனது தற்போது ரவுடி பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது.
விக்னேஷ் சிவன் சோபா, பிரதீப் சோபா: விக்னேஷ் சிவன் சோபா எப்பவுமே ஓடிக்கிட்டே இருக்கும், நல்லா யோசிக்கும், நல்ல படங்களை இயக்கும் என பேசி அவரை விற்க முயற்சித்த ப்ளீஸ் என்னை கொல்லாதே சிறுவன் ரசூல் அடுத்து ஒளிப்பதிவாளர் ரவி வர்மாவை பார்த்து இது கேமரா சோபா ஒரே இடத்தில் படங்களை எடுக்கும் என்கிறார். பின்னர் ஹீரோயின் க்ரித்தி ஷெட்டி மற்றும் ஹீரோ பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்டோரையும் சோபா என்று அழைத்து வியாபாரம் செய்யும் வசனங்களைப் பேசியுள்ள வீடியோ காட்சி தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
ஜாக்பாட்: சினிமாவில் நடிக்க பலரும் பல ஆண்டுகள் முயற்சித்தும் ஒரு வாய்ப்பு கூட கிடைக்காத நிலையில் யூடியூபில் ட்ரெண்டான இந்த சிறுவன் அடுத்தடுத்து பெரிய பட வாய்ப்புகளை பிடித்து விட்டாரே என பலரும் பிரமித்துப் போய் உள்ளனர். எல்ஐசி படத்தின் டைட்டிலில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்யாமல் விக்னேஷ் சிவன் அறிவித்திருக்கிறார் என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











