ரோஹித் சர்மாவுடன் உறவு: திடுக் தகவல்களை வெளியிட்ட நடிகை

By Siva

லண்டன்: கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை காதலித்ததாக நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மாடலும், நடிகையுமான சோபியா ஹயாத் கன்னியாஸ்திரியானார். அதன் பிறகு ஒருவரை திருமணம் செய்து பிரிந்தார். கணவர் தன்னை கொடுமைப்படுத்தியதாகக் கூறி பிரிந்தார்.

இந்நிலையில் அவர் தனது வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதி வருகிறார். அந்த புத்தகத்தில் தான் எழுதி வருவது குறித்து லண்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,

 ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மாவை லண்டனில் உள்ள கிளப் ஒன்றில் சந்தித்தேன். நான் நடித்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடிக் கொண்டிருந்தோம். நான் டான்ஸ் ஆடியபோது பட செட்டில் பழக்கமான ஒருவர் ரோஹித்தை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். இவர் தான் ரோஹித் சர்மா என்றார் அவர். நான் கிரிக்கெட் பார்க்காததால் அவர் யார் என்று எனக்கு தெரியவில்லை.

சோபியா

சோபியா

கிளப்பில் நானும், ரோஹித்தும் பேசிக் கொண்டிருந்தோம். கிளப்பில் அமைதியான இடத்திற்கு சென்றோம். அங்கு அவர் எனக்கு முத்தம் கொடுத்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து டான்ஸ் ஆடினோம். அவர் நல்லவர், ஸ்வீட்டானவராக இருந்தார். ஹோட்டல்கள் மற்றும் அறைகளில் எங்களை பார்த்த மீடியாவுக்கு ஒரு ஐடியா வந்துவிட்டது.

மீடியா

மீடியா

நானும், ரோஹித்தும் காதலிப்பதை மீடியா கண்டுபிடித்துவிட்டது என்று என் மேனேஜர் தெரிவித்தார். நான் இந்த காதலை வெளிப்படையாக கூற தயாராக இல்லை. நான் இந்த உறவை மதிக்கிறேன் என்றேன். ஆனால் ரோஹித்தோ நான் ஒரு ரசிகை மட்டுமே என்று மீடியாவிடம் தெரிவித்தார். அது என்னை காயப்படுத்தியது. அதன் பிறகு அவரை பிரிய முடிவு செய்து பிரிந்தேன் என்றார்.

பிளாக்

ரோஹித்தை ட்விட்டரில் பிளாக் செய்ததாக சோபியா தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு ரோஹித் சர்மா பற்றி சோபியா மோசமாக ட்வீட்டியதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து தற்போது ஷேர் செய்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X