இதான் சார் படிப்பு.. ரஜினி கல்வி முக்கியத்துவத்தை உணர்ந்த தருணம் எது தெரியுமா?.. பாப்பையா முன் பாடம்
சென்னை: ரஜினியின் நடிப்பில் உருவாகியிருக்கும் கூலி திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. படத்தின் டிக்கெட் புக்கிங் எல்லாம் தொடங்கி படு ஜோராக நடந்துவருகிறது. கண்டிப்பாக இப்படம் 1000 கோடி ரூபாய் வசூலிக்கக்கூடியதற்கான அறிகுறிகள் தென்படுவதாக திரைத்துறை ஆர்வலர்கள் தொடர்ந்து கூறிவருகிறார்கள். இதனால் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கூலி படம் சந்தித்திருக்கிறது.
ரஜினியின் படங்கள் ரிலீஸ் என்றாலே அந்த நாள் தமிழ்நாட்டில் திருவிழாதான். கடந்த பல வருடங்களாக நிலை இப்படித்தான் நீடிக்கிறது. ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு தங்களது ஆதரவை கொடுத்துவருகிறார்கள். அதுவும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். இப்போதைய நிலைமைக்கு இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் ஒருவராக லோகி திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
எல்லாமே ஹிட்தான்: கூலிக்கு முன்னதாக அவர் இயக்கிய லியோ, மாஸ்டர், விக்ரம், கைது, மாநகரம் ஆகிய ஐந்து படங்களுமே ஹிட்தான். இவற்றில் லியோ மட்டும்தான் விமர்சன ரீதியாக அடி வாங்கியது. அதேசமயம் வசூல் ரீதியாக படம் ஏகோபித்த ஆதரவை பெற்றது. 200 கோடி ரூபாய்வரைக்கும் படம் வசூல் என்றுதான் சொல்லப்பட்டது. வணிக ரீதியாகவும், விமர்ச்ன ரீதியாகவும் வரிசையாக ஹிட் கொடுத்த இயக்குநரின் படம் என்பதும் எதிர்பார்ப்பு எகிற இன்னொரு காரணம்.

டிக்கெட் புக்கிங்: படத்தின் ட்ரெய்லர், பாடல்கள் எல்லாம் ஏற்கனவே ஹிட்டாகிவிட்டன. படத்துக்கு ஏ சான்றிதழ் கிடைத்திருப்பது படத்துக்கு கொஞ்சம் பின்னடைவு என்றாலும்; டிக்கெட் புக்கிங்கில் மாஸ் காட்டிவருகிறது. இதுவரை 50 கோடி ரூபாய்க்கும் மேல் அட்வான்ஸ் புக்கிங்கிலேயே வசூலித்துவிட்டதாக தெரிகிறது. எனவே முதல் இரண்டு நாட்கள் வசூலையும் சேர்த்தால் கண்டிப்பாக 300 கோடி ரூபாய்வரை போகுமோ என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.
சாலமன் பாப்பையா பேட்டி: 74 வயதாகும் ஹீரோவுக்கு இவ்வளவு மாஸா என்று இந்திய திரையுலகமே பிரமிப்பில் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால் ரஜினியோ வழக்கம்போல் போயஸ் கார்டன் இல்லத்தில் கேஷுவலாக இருக்கிறார். இந்நிலையில் சாலமன் பாப்பையா அளித்த பேட்டி ஒன்று கவனம் ஈர்த்திருக்கிறது. அவர் தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், "சிவாஜி படத்தில் என்னை நடிக்க கமிட் செய்தார்கள். நான் செட்டுக்கு போய் அமர்ந்திருந்தேன்.
இதான் சார் படிப்பு: அப்போது ஒருவர் என்னிடம் வந்து வணக்கம் என சொன்னார். நானும் பதிலுக்கு வணக்கம் சொல்லிவிட்டு அமைதியாகிவிட்டேன். அவர் அங்கிருந்து போன பிறகு ரஜினி சார் கொடுக்க சொன்னார் என தொடர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தார்கள். பிறகுதான் தெரிந்தது என்னிடம் வணக்கம் வைத்தவர்தான் ரஜினி என்று. உடனே அங்கே சென்று அவரிடம் நடந்ததை எடுத்து சொன்னேன். அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லிவிட்டார். பிறகு படத்தின் ஷூட்டிங் கடைசி நாளின்போது நானும் அவரும் அமர்ந்திருந்தோம்.
அப்போது ஒருவர் என்னிடம் வந்து எனக்கு மட்டும் வணக்கம் வைத்துவிட்டு சென்றார். உடனே ரஜினியோ, 'பார்த்தீங்களா பக்கத்தில் நான் அமர்ந்திருக்கிறேன். எனக்கு வணக்கம் வைக்கவில்லை. உங்களுக்கு மட்டும் வைத்து செல்கிறார். இதுதன் சார் படிப்பு என கூறினார். அதற்கு நானோ இல்லை அவருக்கு உங்களை அடையாளம் தெரிந்திருக்காது என சொல்லிக்கொண்டு இருக்கும்போதே; அந்த நபர் மீண்டும் வந்து ரஜினியிடம் அய்யோ சார் உங்களை எனக்கு அடையாளமே தெரியவில்லை என கூறினார். உடனே ரஜினி என்னை பார்த்தார்" என்றார்.


Click it and Unblock the Notifications











