ஆரியை டார்கெட் செய்யும் ரியோ அன்ட் சோம்.. பாலாவுக்கு ஆதரவு.. இன்னைக்கும் கச்சேரி இருக்கும் போலயே!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் நடைபெற்ற ஃபிரீஸ் டாஸ்க்கிற்கு பிறகு ஹவுஸ்மேட்ஸின் நடவடிக்கையில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

சில ஹவுஸ்மேட்ஸ் ஆரியிடம் நயமாக நடந்து கொள்கின்றனர். சில ஹவுஸ்மேட்ஸ் ஆரியின் பெயரை கெடுக்கும் முயற்சியாக அவரிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஆரியின் சுயமரியாதை..

ஆரியின் சுயமரியாதை..

அதிலும் குறிப்பாக பாலாஜி, ஆரியை வைத்தேன் தீர்த்தேன் என செய்து வருகிறார். ஆரியுடைய சுயமரியாதையை சீண்டி அவரை உண்டு இல்லை என பார்த்து வருகிறார். நிமடத்திற்கு நிமிடம் அவருடைய மனநிலை மாறுகிறது.

இன்ஃபுளுயன்ஸ்

இன்ஃபுளுயன்ஸ்

ஆரியை தரக்குறைவாகவும் இழிவாகவும் பேசும் பாலாஜி, அடுத்த சில நிமிடங்களிலேயே எங்கு நமக்கு கிடைக்கும் ஓட்டு பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் உடனே கட்டியணைத்து மன்னிப்பு கேட்டு விடுகிறார். மேலும் தனியாக கேமரா முன்பு ஆரி குறித்து தவறாக பேசி ஆடியன்ஸை இன்ஃபுளுயன்ஸ் செய்து வருகிறார்.

மீண்டும் மல்லுக்கட்டு

மீண்டும் மல்லுக்கட்டு

இடையில் கொஞ்சம் மாறியிருந்த பாலாஜி, அவரது சகோதரர் வீட்டுக்கு வந்த போது பழைய பாலாஜியாய் மாறு என்று கூறியதை தொடர்ந்து பாலாஜி, ஆரியிடம் மல்லுக்கட்ட தொடங்கிவிட்டார். இதனை ரசிகர்கள் பல நாட்களாய் கூறி வருகின்றனர்.

பழைய பாலாவ காணோம்

பழைய பாலாவ காணோம்

இந்நிலையில் இன்றைய எபிசோடின் இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் ரியோவும் சோமும் கார்டன் ஏரியாவில் வழக்கமான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் சோம், வீட்லேருந்து வந்துட்டு போன பிறகு பழைய பாலாவ காணோம்னு சொல்லி சொல்லி அவன் ஒரு மாதிரி ஆயிட்டான்.

பாலாவுக்கு பயம் வந்துடுச்சு

பாலாவுக்கு பயம் வந்துடுச்சு

சண்டை போட்டுக்கிட்டே இருக்கணுமாம்.. பாவம் அவன்.. இப்போ அவன் இந்த மாதிரி ஆடுறதுக்கு காரணமும் அவன சேவ் பண்ணிக்கிறதுக்குதான். அவனுக்கு பயம் வந்துடுச்சு.. பாலாஜி சண்டை போட்டதையெல்லாம் தவிர்த்து பார்த்தா அவன் நல்லாதான் விளையாடியிருக்கான்.

எல்லார் மேலேயும் தப்பு

எல்லார் மேலேயும் தப்பு

சோம்மின் இந்த கருத்தை மறுக்கும் ரியோ, ஒரு பாயிண்ட்டுக்கு பிறகுதான் பாலாஜி கரெக்ட்டா விளையாடியது போல் உள்ளது. அதற்கு பாதிக்கு அப்புறமா என கேட்கும் சோம், எல்லார் மேலேயும் தப்பு இருக்கு.. அவன் மேலேயே எல்லாத்தையும் சொல்ல முடியாது.

பேரை சொல்ல விரும்பவில்லை

பேரை சொல்ல விரும்பவில்லை

சில பேர் மேல ரொம்ப தப்பு இருக்கு.. அதை யார் என்று சொல்ல நான் விரும்பவில்லை என்கிறார். சோம் பேசியதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஆரியை தான் கட்டம் கட்டுகிறீர்கள் என்று தெள்ள தெளிவாக தெரிகிறது என்று சோமையும் ரியோவையும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X