இப்போ சந்தோஷமா? லிஸ்ட்டில் சேர்ந்த சோம்.. ஆரியிடம் செம்ம மல்லுக்கட்டு.. பதற வைக்கும் அன்சீன்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோவில் சோம் ஆரியிடம் மல்லுக்கு நிற்பது தெரிய வந்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி ஃபைனல்ஸை நெருங்கியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்த வாரம் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் தொடங்கியுள்ளது.

இதில் முதல் டாஸ்க்காக தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை ஹவுஸ்மேட்ஸ் தூக்கிப் பிடிக்க வேண்டும். அதில் கடைசி வரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளரே வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டது.

கடைசி வரை..

கடைசி வரை..

இதில் ஷிவானி, கேபி, ரம்யா, ஆரி, சோம் என அடுத்தடுத்து அவுட்டாக ரியோவும் பாலாஜியும் மட்டும் தாக்குப்பிடித்து நின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான அன்சீன் புரமோ வெளியாகியுள்ளது.

கை இறங்கிவிட்டது

கை இறங்கிவிட்டது

இதில் பலூன் டாஸ்க்கின் முடிவில் ஹவுஸ்மேட்ஸ் இடையே பெரும் வாக்குவாதம் நடப்பது தெரியவந்துள்ளது. இதில் பலூனை பிடித்திருக்கும் சோமின் கை நிறைய முறை இறங்கி ஏறிவிட்டது பரவாயில்லையா என கேட்கிறார் ரம்யா.

ஆரி விளக்கம்

ஆரி விளக்கம்

அதற்கு ஆரி, அவுட்தான் என்று கூறுகிறார். தொடர்ந்து பாயிண்ட்ஸ் வழங்கப்படுகிறது. அப்போது நான் கையை இறக்கவில்லை. இப்படிதான் பெண்ட் செய்தேன். நீயும் இப்படிதான் செய்தாய் என சோமிடம் விளக்கம் கொடுக்கிறார் ஆரி.

தேவையில்லாம பேசுவார்

தேவையில்லாம பேசுவார்

தொடர்ந்து இந்தா நீயே வச்சுக்கோ என்று தனக்கு கொடுத்த பாயிண்ட்ஸை டேக்கை ட்ரேவில் போட்டுவிட்டு செல்கிறார் ஆரி. இதனை தொடர்ந்து ரியோ பாயிண்டுகளை மாற்றுகிறார். அப்போது பேசும் சோம், அவர் தேவையில்லாம பேசுவார்டா என்று ஆரியை காட்டி பேசுகிறார்.

இப்போ ஹேப்பியா?

இப்போ ஹேப்பியா?

அதற்கு பதில் சொல்லும் ஆரி நீ செய்ததை தானே சொல்கிறேன், ஏன் கோபப்படுகிறாய் என கேட்கிறார். இதனால் கடுப்பாகும் சோம் நான் தான் ஒத்துக்கிட்டேனே.. நீயே 5 எடுத்துக்கோ.. இப்போ ஹேப்பியா என்று கேட்கிறார்.

பின்னால் பேசும் சோம்

பின்னால் பேசும் சோம்

பிக்பாஸ் வீட்டில் அதிகம் ஆரியை காயப்படுத்தாமல் இருந்தவர் சோம். இருந்த போதும் பின்னால் பேசுவது, அவரை கேலி செய்வது, தனது நண்பர்களான ரியோ மற்றும் கேபியிடம் அவர் குறித்து புகார் செய்வது என இருந்து வந்தார் சோம்.

மல்லுக்கட்டும் சோம்

மல்லுக்கட்டும் சோம்

தற்போது நேரிடையாகவே ஆரியிடம் மோத தொடங்கிவிட்டார். கடந்த வாரம் முழுக்க பாலாஜி, ரம்யா, ரியோ ஆகியோர் ஆரியிடம் மல்லுக்கட்டினர். இந்நிலையில் இன்று சோம் மல்லுக்கட்ட தொடங்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X