ரம்யாவை மனைவியாக்கிய சோம்.. பொண்ணும் பொண்டாட்டியும் ஒரே வயசுல இருக்காங்க.. கலாய்த்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் சோம் சேகரும் ரம்யா பாண்டியனையும் ஜோடி சேர்த்து விட்டுள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாள்தோறும் சில டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகினற்ன.
அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க்கை கொடுத்துள்ளனர்.

இளைய மகன் சோம்
இதில் அர்ச்சனா பாட்டியாக உள்ளார். அர்ச்சனாவின் இளைய மகனாக சோமும் அவரது மனைவியாக ரம்யா பாண்டியனும் உள்ளனர். இவர்கள் இருவருக்குள்ளும் ஏற்கனவே சாஃப்ட் கார்னர் உள்ள நிலையில் பிக்பாஸ் ஜோடி சேர்த்துவிட்டுள்ளார்.

பத்திரப்படுத்திய சோம்
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய நாளில் கொடுக்கப்பட்ட சாக்லேட்டை ரம்யா பாண்டியன், சோமுக்கு தான் கொடுத்தார். அதை சோம் சாப்பிடாமல் அப்படியே பத்திரப்படுத்தி வைத்திருந்தார்.

ஸ்பெஷல் பவர்
இதனை அறிந்து ரியோ, அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் அவரை மரணமாய் கலாய்த்தனர். கடந்த வாரம் ரம்யாவுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்கப்பட்டு கேப்டன் டாஸ்க்கில் பங்கேற்பவர்களில் மாற்றம் செய்யலாம் என கூறினார் பிக்பாஸ்.

சோமுவுக்கு ஆதரவு
அப்போது நிஷாவுக்கு பதில் கேப்டன் டாஸ்க்கில் சோமை மாற்றினார். அதன் பிறகும் பலமுறை பெஸ்ட் பர்ஃபாமர் உட்பட என்ன வந்தாலும் சோமுவுக்கே ஆதரவாய் இருந்து வருகிறார்.

டார்லிங்கான ரம்யா
இந்நிலையில் இன்று இருவரும் கணவன் மனைவி டாஸ்க்கை செய்துள்ளனர். முதலில் ரம்யா என்றழைத்த சோம் பின்னர் இனிமே ரம்யா இல்ல டார்லிங் என கொண்டாட ஆரம்பித்துவிட்டார்.

பொண்ணும் பொண்டாட்டியும்
ஆனால் சோம் அவருடைய மனைவியுடன் சேர்ந்து வீட்டு பத்திரத்தை திருட வேண்டும் என டாஸ்க் கொடுத்தார் பிக்பாஸ். இதற்காக தங்களின் கூட்டாளியான கேபியை தங்களின் பிள்ளை என்றும் கூறினர். இதனை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் பொண்ணு எது பொண்டாட்டி எதுன்னே தெரியல என கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











