Just In
- 2 hrs ago
அம்சமான போட்டோஷூட்.. அழகை அள்ளும் ஐஸ்வர்யா தத்தா... வாய் பிளந்த ரசிகர்கள்!
- 2 hrs ago
தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
- 13 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 13 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
Don't Miss!
- News
டிரம்பின் அலட்சியத்தால்... 4 லட்சத்தை தாண்டிய கொரோனா உயிரிழப்பு... என்ன செய்யப்போகிறார் பைடன்
- Sports
அத்தனை பேர் இருந்தும்.. நடராஜனை கூப்பிட்டு கோப்பையை கொடுத்த ரஹானே.. இதுதான் காரணம்.. செம்ம!
- Lifestyle
தைராய்டு பிரச்சனை வரக்கூடாதா? அப்ப இந்த யோகாசனங்களை செய்யுங்க...
- Automobiles
லம்போர்கினி கார்களையே மிஞ்சிவிடும் தோற்றத்தில் ஹூண்டாய் எலண்ட்ரா!! மாடிஃபை செய்தால் இப்படி இருக்கனும்
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்னை பத்தி தப்பா பேசியிருப்ப.. பிக்பாஸ் வீட்டுல எக்ஸ்ட்ரா கேமரா நீ.. ஆரியை வச்சு தீர்த்த சோம்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நல்லவன் டூ கெட்டவன் டாஸ்க்கில் ஆரியை இந்த வீட்டின் இன்னொரு கேமரா என்று கூறி வச்சு தீர்த்தார் சோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கின் 6 வது டாஸ்க்காக வழக்கம் போல் பேசும் டாஸ்க்கே கொடுக்கப்பட்டது.
ஹவுஸ்மேட்ஸின் குறைகளை சொல்லும் டாஸ்க்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸும் சக ஹவுஸ்மேட்ஸின் குறைகளை சொல்ல வேண்டும்.

ரியோவின் குறை
அந்த வகையில் லிவிங் ஏரியாவில் பிளாஸ்மா முன்பு நின்று பேசிய சோம், முதலில் ரியோவின் குறைகளை கூறினார். ரியோ எப்போதும் தனியாகவே இருப்பது போல் தெரிகிறது. மற்றவர்களுடன் பேசினாலும் எதையோ யோசித்து கொண்டிருப்பது போல் உள்ளது அந்த மாதிரி வேண்டாம் என்று கூறினார்.

கேபியின் குறை
தொடர்ந்து கேபி குறித்து பேசிய சோம், ரொம்ப நாளாக நீ நாமினேஷனுக்கு வரவில்லை. அதற்கு காரணம் உன்னை யாருக்கும் தெரியவில்லை. 4 வாரமாதான் டாஸ்க்கில் தெரிகிறாய். கம்ஃபர்ட் ஸோனில் இருந்திருக்கிறாய். முன்பே நீ காட்டியிருக்கலாம் எனறார்.

பாலாவின் குறை
அடுத்து ஷிவானி குறித்து பேசிய சோம், 3 வாரமா தான் நீ கேமில் இருப்பதாக தெரிகிறது. இத முதல்ல இருந்தே செய்திருக்கலாம் என்றார். அடுத்து ரம்யா குறித்து பேசிய சோம், உனக்கு பிடிச்சவங்ககிட்ட மட்டும்தான் நீ உன் ஒப்பினியனை சொல்கிறாய் என்றார். அடுத்த பாலாஜி குறித்து பேசிய சோம் இப்போ இருக்குற பாலாதான் நல்லாருக்கு. இப்போதான் பிடித்த மாதிரி இருக்கிறாய் என்றார்.

ஆரியை இன்சல்ட் செய்த சோம்
அடுத்து ஆரி குறித்து பேசிய சோம், அவரை இன்சல்ட் செய்வது போலவே பேசினார். குறை சொல்லும் டாஸ்க், இப்போதான் தொடங்கியிருக்கு. ஆனால் முதல் நாள் முதலே குறை சொல்ற டாஸ்க்க ஆரம்பிச்சுட்ட. நல்ல விஷயங்களை சொல்ற. அங்கக்கங்க தவறுகளையும் பதிவு பண்ற.

எக்ஸ்ட்ரா கேமரா..
மற்ற ஒருத்தர பத்தி என்கிட்ட சொல்லியிருக்க. அப்போ என்னைப்பத்தி மத்தவங்கக்கிட்ட சொல்லியிருப்பல்ல. இந்த வீட்டுல 70 கேமரா இருக்குன்னா. நீ எக்ஸ்ட்ரா கேமரா. ஒருத்தவங்களோ 80% குறையை சொல்லியும் 20% மட்டுமே நல்லத சொல்லி விளையாடுற. குறையை மட்டுமே சொல்லி விளையாட வேண்டிய அவசியம் இல்ல என்று ஆரியை டேமேஜ் செய்து பேசினார்.