அப்பட்டமாய் ஃபேவரிட்டஸத்தை காட்டிய சோம்.. லெவிஸ்டா டாஸ்க்கில் வின்னர் யாருன்னு பாருங்க!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் நடைபெற்ற லெவிஸ்டா டாஸ்க்கில் கேபிக்காக சோம் செய்த ஃபேவரிட்டிஸம் அப்பட்டமாக தெரிந்தது. .

பிக்பாஸ் வீட்டில் ரியோ தலையில் ஆரம்பத்தில் இருந்தே குரூப்பிஸம் இருந்து வருகிறது. இதனை முதலில் சொன்னவர் சுரேஷ் சக்கரவர்த்திதான்.

இதற்காக அவரை கட்டம் கட்டி அசிங்கப்படுத்தினார் ரியோ. அர்ச்சனா வந்த பிறகு ரியோ தலைமையிலான கேங் அப்படியே அர்ச்சனாவின் கட்டுப்பாட்டில் சென்றது.

நெருக்கமான அன்பு கேங்

நெருக்கமான அன்பு கேங்

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து அர்ச்சனா வெளியேற்றப்பட்டார். அதன்பிறகு பிக்பாஸ் வீட்டில் ரியோ, சோம், கேபி ஆகிய மூன்றும் ரொம்ப நெருக்கமான அன்பு கேங்காக மாறிவிட்டனர்.

ஆரிதான் காரணம் என்பதை போல்

ஆரிதான் காரணம் என்பதை போல்

விளையாட்டு என்றாலும் சரி, பெஸ்ட் பர்ஃபாமர் என்றாலும் சரி அவர்களுக்குள்ளேதான் எல்லாமும். அதிலும் ரியோ, அர்ச்சனா போனதில் இருந்து எல்லாவற்றுக்கும் ஆரிதான் காரணம் என்பதை போல அவரிடம் நடந்து கொள்கிறார்.

சுவாரசியத்தை கெடுக்கும் ரியோ

சுவாரசியத்தை கெடுக்கும் ரியோ

ரியோவின் முகத்தையும் அவரது ரியாக்ஷனையும் பார்க்கவே ரசிகர்களுக்கு எரிச்சலாய் உள்ளது. கேமில் பர்சனல் அட்டாக்குகளை கொண்டுவந்து அதன் சுவாரசியத்தையே கெடுத்து வருகிறார்.

லெவிஸ்டா டாஸ்க்

லெவிஸ்டா டாஸ்க்

இதுவரை இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சோம், ரியோவுக்கும் கேபிக்கும் சப்போர்ட் செய்கிறேன் பேர்வழி என்று தனது கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்து வருகிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற லெவிஸ்டா டாஸ்க்கில் ஆரியும் ரம்யாவும் ஒரு அணியாக இருந்தனர்.

ஆரி ரம்யா டீம்

ஆரி ரம்யா டீம்

கேபியும் அனிதாவும் ஒரு அணியாக இருந்தனர். லெவிஸ்டா புதிய புராடெக்ட் லாஞ்சை முன்னிட்டு அவற்றை வைத்து வித்தியாசமான ரெசிப்பி செய்ய வேண்டும். இதில் ஆரியும் ரம்யாவும், கேக் க்ரீம் என மொத்தம் மூன்று ஐட்டம்களை செய்தனர்.

அனிதா கேபி டீம்

அனிதா கேபி டீம்

அவற்றையெல்லாம் சாப்பிட்ட நடுவரான சாண்டா சோம் ஐ லவ் இட் என்றார். அனிதாவும் கேபியும் ஆரஞ்சு ஃபலுடா மற்றும் கோல்டு காஃபி என 2 ஐட்டங்கள்தான் செய்தனர். அதற்கே அவர்களை வின்னர் என்று அறிவித்துவிட்டார்.

அப்பட்டமாய் குரூப்பிஸம்

அப்பட்டமாய் குரூப்பிஸம்

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியா அப்பட்டமாய் குரூப்பிஸத்தை காட்டுவீர்கள் என்று கழுவி ஊற்றி வருகின்றனர். கேபியை கூட ஒரு பங்குக்கு ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் சோம் மற்றும் செய்யும் குரூப்பிஸத்தையும் ஆரிக்கு எதிரான ஆட்டத்தையும் பொறுக்கவே முடியவில்லை என்று கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X