ஃபினாலேவுக்குள் முதல் ஆளாய் சென்று.. முதல் ஆளாய் எவிக்ட்டான சோம்.. டிவிஸ்ட் வைத்த முகேன்!

சென்னை: பிக்பாஸ் ஃபினாலேவின் முதல் எவிக்ஷனாக சோம சேகர் வெளியேற்றப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் 13 பேர் எவிக்ட்டான நிலையில் ஆரி, பாலாஜி, ரியோ, ரம்யா மற்றும் சோம் ஆகிய 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டுகளாக இருந்தனர்.

ஸ்பெஷல் எவிக்ஷன்

ஸ்பெஷல் எவிக்ஷன்

இன்று நடைபெறும் ஃபினாலேவில் ஒருவர்தான் வின்னர் என்பதால், ஒவ்வொரு போட்டியாளராய் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஃபைனலிஸ்ட்ஸ் என்பதால் அவர்களின் எவிக்ஷன் ஸ்பெஷலாக உள்ளது.

ஐயா முகென்..

ஐயா முகென்..

அந்த வகையில் ஃபினாலேவில் முதலாவதாக எவிக்ட்டாகும் போட்டியாளரை அழைத்து வர கடந்த சீசனின் டைட்டில் வின்னரான முகென் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார். வீட்டுக்குள் சென்ற முகெனை, ஐயா முகென் என பழையதை மறக்காமல் அழைத்தார் பிக்பாஸ்.

பயோ மெட்ரிக்ஸ்

பயோ மெட்ரிக்ஸ்

இதனால் நெகிழ்ந்துப் போனார் முகென். பின்னர் உங்க கெட்டப் நல்லாருக்கு என்றும் முகெனை பாராட்டினார் பிக்பாஸ். தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் கையில் ட்ரோஃபியை கொடுத்து பார்க்க கூறிய முகென், அக்ஸெஸ் கார்டுகளை ஹவுஸ்மேட்ஸ் கையில் கொடுத்து மெயின் டோர் அருகே இருந்த பயோ மெட்ரிக்ஸில் வைக்க கூறினார்.

அக்ஸெஸ் டினைடு

அக்ஸெஸ் டினைடு

அதில் அக்ஸெஸ் அக்செப்ட் ஆகும் போட்டியாளர் என்னுடன் வர வேண்டும் என்று கூறினார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளராய் அக்ஸெஸ் கார்டை வைத்தனர். ஆனால் அனைவரின் அக்ஸெஸுமே டினை ஆனது.
கடைசியில் அது முகெனின் விளையாட்டு என புரிந்தது.

முகத்தில் மாஸ்க்

முகத்தில் மாஸ்க்

அதனை தொடர்ந்து ஃபைனலிஸ்ட்களின் முகத்தில் மாஸ்க்கை மாட்டி பிடித்த இடத்தில் அமருங்கள் என்று கூறிய முகென், பஸர் அடித்ததும் பஸரை கழட்டுங்கள், உங்களில் ஒருவர் இருக்கமாட்டார் என்றார். இதனால் ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து பிரியாவிடை கொடுத்துக் கொண்டு மாஸ்க்கை மாட்டினர்.

முகெனின் விளையாட்டு

முகெனின் விளையாட்டு

ஆனால் பஸர் அடித்த பிறகும் யாரும் வெளியேறாமல் இருந்தனர். இதனால் அதுவும் முகெனின் விளையாட்டு என்று புரிந்தது. இறுதியாக ஸ்டோர் ரூமில் பெயருடன் இருந்த அக்ஸெஸ் கார்டை வைத்து ஸ்கேன் செய்ய சொன்னார் பிக்பாஸ்.

எவிக்ட்டான சோம்

எவிக்ட்டான சோம்

ஸ்கேனிங்குக்கு ஆட்களை தேர்வு செய்வது முகெனின் முடிவு என்றும் கூறினார். இதனால் அனைவரையும் முதலில் ஸ்கேன் செய்ய சொன்ன முகென், இறுதியாக சோம சேகரை ஸ்கேன் செய்யுமாறு கூறினார். சோம் ஸ்கேன் செய்தபோது எவிக்ட்டட் என வந்தது.

Recommended Video

Aari யின் வெற்றியை பாராட்டிய Bigg Boss போட்டியாளர்கள் - Filmibeat Tamil
ரம்யாவுக்கு சாக்லேட் கவர்

ரம்யாவுக்கு சாக்லேட் கவர்

இதனால் ஃபைனலிஸ்ட்டுகளில் இருந்து முதல் நபராய் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் சோம். டிக்கெட் டூ ஃபினாலேவை வென்று முதல் நபராய் பிக்பாஸ் ஃபினாலேவுக்குள் சென்ற சோம் முதல் ஆளாய் வெளியே வந்தார். வெளியே வரும் போது ஏற்கனவே ரம்யா கொடுத்த சாக்லேட்டை சாப்பிட்டு விட்டு கவரை கொடுத்தார் சோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X