உன் தப்ப ஒத்துக்கவே மாட்டீயா? ஆரியுடன் மல்லுக்கு நின்று கடைசியில் அசிங்கப்பட்ட சோம்!
சென்னை: டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க்கில் ஆரிதான் தவறு செய்தார் என்று மல்லுக்கு நின்று அசிங்கப்பட்டார் சோம்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஃபினாலே வாரம் தொடங்கவுள்ளது. இதனை தொடர்ந்து நேரடியாக ஃபினாலே வாரத்திற்குள் நுழையும் வாய்ப்பை அளிக்கும் டிக்கெட் ஃபினாலே டாஸ்க்குகள் நேற்று தொடங்கின.
இதனை முன்னிட்டு முதல் டாஸ்க்காக போட்டியாளர்கள் தண்ணீர் நிரப்பப்பட்ட பலூன்களை பிடித்திருக்க வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கைகளை மடக்க கூடாது என்று கண்டிஷன் போடப்பட்டிருந்தது.

அடிக்கடி கையை மடக்கி
ஆனால் சோம் அடிக்கடி கையை மடக்கியும் மற்றொரு கையால் காலை பிடித்தப்படி பேலன்ஸ் செய்தும் இஷ்டத்துக்கு நின்றார். அதனை மற்ற பெண் போட்டியாளர்கள் அடிக்கடி சொல்லியும் கையை நீட்டி மடக்கி நின்றாரே தவிர பலூனை விடவில்லை.

ரியோ டபுள் ஸ்டேண்டர்டு
ஆனால் ஆரி பின்னாடி நகர்ந்துவிட்டார் என்று சொன்னதுமே பலூனை விட்டுவிட்டார். இதனால் தனக்கு முன்னேரே சோம் அவுட்டாகி விட்டதாக கூறி தனக்கு மூன்றாவது இடத்தை கேட்டார் ஆரி. முதலில் ஒப்புக்கொண்ட சோம், பின்னர் ரியோவின் பேச்சைக் கேட்டு பலூன் விட்டதுதான் கணக்கு என்றார்.

ஆரியிடம் மல்லுக்கு நின்று..
அதற்கு பதில் கொடுத்த ஆரி, கையை மடக்குனாலே அவுட் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி என்றால் நீதான் முதலில் அவுட் என்றார். இதனை பெண் போட்டியாளர்களும் ஒப்புக் கொண்டனர். ஆனால் சோம் நீயும் அப்படிதான் கையை மடக்கினாய் என்று ஆரியிடம் மல்லுக்கு நின்றார்.

மாற்றி மாற்றி பேசிய ரியோ
நிற்கும் போதெல்லாம் கையை ஏற்றி இறக்கினாலே டிஸ்குவாலிஃபைடு என்ற ரியோ, சோம் மடக்கினார் என்பதை அறிந்ததும் பலூனை விட்டததுன் கணக்கு என்று தனது இஷ்டத்துக்கு மாற்றினர். ஆரி தனது சொன்னதை கூட காதில் வாங்காமல் கவனிக்காமல் அவரை அவமதித்தப்படி மற்ற ஹவுஸ்மேட்ஸின் பாயிண்டை கேட்டார்.

இப்போ ஹேப்பியா?
தொடர்ந்து ஆரியிடம் தான் தவறு செய்யவில்லை என்று மல்லுக்கு நின்ற சோம், நாங்க எங்க தப்ப ஒத்துக்கொள்கிறோம் நீ ஏன் ஒத்துக்கொள்ள மாட்டேங்கிறாய் என கேட்டு சண்டை போட்டார். பின்னர், இந்த நீயே வைத்துக்கொள் என்று ஆரிக்கு மூன்றாவது இடத்தை கொடுத்துவிட்டு, இப்போ ஹேப்பியா என்றார்.

ரியோ நரித்தனம்
அதற்கு ரியோ வீ ஆர் நாட் ஹேப்பி என்று கூறி ஆரியை பின்னுக்கு தள்ளவே முயற்சி செய்தார். இதனால் கடுப்பான ஆரி தனக்கு நான்காவது இடத்தையே கொடுங்கள் என்று கூறி பாயிண்ட்ஸ் பதியப்பட்டிருந்த போர்டில் தன்னுடைய பாயிண்ட்ஸை மாற்றி வைத்தார்.

அசிங்கப்பட்ட சோம்
இதனை தொடர்ந்து ரூல்ஸை படித்த சோம், நான் தான் தவறு, கையை மடக்கிவிட்டேன். ஆரி சொன்னதுதான் சரி அவருக்கு தான் மூன்றாவது இடம் கொடுக்க வேண்டும் என ஒப்புக்கொண்டார். இதனை பார்த்த ரசிகர்கள், சோம்க்கும் ரியோவுக்கும் இந்த அசிங்கம் தேவையான என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











