பிக்பாஸை போல பேசி கேலி செய்த சோம்.. நொடிக்கு நொடி மொக்கை வாங்கிய சனம்.. களைக்கட்டிய பிக்பாஸ் ஹவுஸ்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சோம், சேகர் சனம் ஷெட்டியுடன் சேர்ந்து பிக்பாஸ் போன்று பேசி பர்ஃபாமன்ஸ் கொடுத்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நவராத்திரி கொண்டாட்டமாக, பல்வேறு பர்ஃபான்மன்ஸ்களை கொடுத்து வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.

கிராம வாசிகளாகவும் நகர வாசிகளாகவும் பிரிந்து சமையல், பூஜை, ஆட்டம் பாட்டம் என கலக்கினர்.

கேபி டான்ஸ்

கேபி டான்ஸ்

இதன் ஒரு பகுதியாக கிராம வாசிகளும் நகர வாசிகளும் குட்டி குட்டி பர்ஃபாடமன்ஸ் கொடுத்தனர். அந்த வகையில் கிராம வாசிகள் சார்பாக கேபி, அவன் இவன் பாடலுக்கு நடனமாடினார்.

ஷிவானி டான்ஸ்

ஷிவானி டான்ஸ்

நகரவாசிகள் சார்பாக ஷிவானி டார்லிங் டம்பக் பாடலுக்கு நடனமாடினார். இருவருமே ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காமல் செம க்யூட்டாக ஆட்டம் போட்டனர். அதனை தொடர்ந்து சோம் சேகரும் சனம் ஷெட்டியும் பிக்பாஸ் வீட்டின் அன்றாட வேலைகளை கிண்டலடித்து பர்ஃபாமன்ஸ் கொடுத்தனர்.

பிக்பாஸை போல் பேசி

பிக்பாஸை போல் பேசி

அப்போது காலையில் பாடல் போட்டதும் எழுந்து தூக்க கலக்கத்தில் டான்ஸ் ஆடுவது முதல் ஒவ்வொரு வேலையாக பிக்பாஸ் சொல்ல சொல்ல சனம் செய்வதாக இருந்தது. பிக்பாஸை போன்றே பேச முயற்சி செய்தார் சோம் சேகர்.

தமிழை கொலை செய்த சனம்

தமிழை கொலை செய்த சனம்

அப்போது சனம் ஷெட்டியை பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக்குவதாக கூறி விதிமுறைகளை படிக்க சொல்லுவதுமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அப்போது தமிழை கொலை செய்தார் சனம் ஷெட்டி.

சனம் ஷெட்டிக்கு நோஸ்கட்

சனம் ஷெட்டிக்கு நோஸ்கட்

அதனைக் கேட்ட சோம் சேகர், பிக்பாஸ் டோனில் சனம் ஷெட்டி பேசுவதை கரெக்ட் செய்வதாக கூறி அடிக்கடி மொக்கை செய்தார். ஒவ்வொரு முறையும் பிக்பாஸை போலவே, சனம் ஷெட்டிக்கு நோஸ்கட் கொடுத்தார் சோம்.

பாட்டுப்பாடி ஆட்டம்

பாட்டுப்பாடி ஆட்டம்

பார்க்கவே ரசிக்கும்படியாக இருந்ததது அந்த செக்மென்ட். சமூக வலைதளங்களிலும் சோம் சேகரின் பர்ஃபாமன்ஸை ரசிகர்கள் பாராட்டியிருந்தனர். இதனை தொடர்ந்து சனம் ஷெட்டியும் பாலாஜியும் மேடையில் பாட்டுப்பாடி ஆட்டம் போட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X