twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபினாலே டிக்கெட்டை தட்டி தூக்கிய சோம்.. அதற்கு தகுதியானவரா? ஹவுஸ்மேட்ஸ் சொன்னதை பாருங்க!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான நேரடி ஃபினாலே டிக்கெட்டை சோம் சேகர் வென்றார்.

    டிக்கெட் டூ ஃபினாலேவுக்காக இந்த வாரம் 9 டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.

    இதில் அதிக மதிப்பெண்களை பெற்ற சோம் பிக்பாஸ் வீட்டின் ஃபினாலே வாரத்திற்குள் நேரடியாக பெறும் வாய்ப்பை பெற்றார்.

    கடைசி வாரத்திலும் முதல் ஆளாய் சேவ்வான ஆரி.. பிக்பாஸ் வீட்டின் தரையை ஆக்ரோஷமாக தட்டி ஆறுதல்!கடைசி வாரத்திலும் முதல் ஆளாய் சேவ்வான ஆரி.. பிக்பாஸ் வீட்டின் தரையை ஆக்ரோஷமாக தட்டி ஆறுதல்!

    சோமுக்கு ஒரு பரிசு

    சோமுக்கு ஒரு பரிசு

    நிகழ்ச்சி தொடங்கியதுமே டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வாழ்த்துக்கள் சோம் என்று தொடங்கினார் கமல். தொடர்ந்து பேசிய கமல் உங்களுக்கு ஒரு பரிசு இருக்கிறது. அந்த பரிசு ஸ்டோர் ரூமில் உள்ளது.

    ஸ்க்ரீன் போட்ட படம்

    ஸ்க்ரீன் போட்ட படம்

    ஹவுஸ்மேட்ஸ் தங்களின் கையால் கொடுக்க வேண்டும் என்றார். இதனை ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து சோம சேகருக்கு ஃபினாலே டாஸ்க்குக்கான டிக்கெட்டை கொடுத்தனர். இதனை தொடர்ந்து லிவிங் ஏரியாவில் ஸ்க்ரீன் போட்டு மூடப்பட்டிருந்த ஒரு படம் வைக்கப்பட்டிருந்தது.

    மகிழ்ச்சியடைகிறேன்

    மகிழ்ச்சியடைகிறேன்

    அந்த ஸ்க்ரீனை விலக்க சொன்னார் கமல். அப்போது ஸ்க்ரீன் விலக்கப்பட சோம சேகரின் போட்டோ அதில் இருந்தது. அதனை பார்த்த சோம சேகர், நான் எனக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன், இங்குள்ள அனைவருக்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறுகிறார்.

    புஷ் பண்ணாங்க..

    புஷ் பண்ணாங்க..

    எனக்கு வார்த்தையே வரவில்லை. என்ன சொல்வது என்று தெரியவில்லை. எல்லாரும் அவங்களை புஷ் பண்ணாங்க. அது என்னையும் புஷ் பண்ண வச்சுது என்றார். தொடர்ந்து அவர் டிக்கெட் டூ ஃபினாலே வென்றது குறித்து கருத்து கூறினர் ஹவுஸ்மேட்ஸ்.

    எதிர்பார்த்ததை விட அதிகம்

    எதிர்பார்த்ததை விட அதிகம்

    அப்போது பேசிய ரியோ, இதுவரைக்கும் அவர் பங்கேற்ற எல்லாவற்றிலும் லைட்டா மிஸ்ஸாகுதோன்னு தோனுச்சு. சோம் அவரை முழுமையாக வெளிப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது என்றார்.

    நூலிழையில் பறிபோனது

    நூலிழையில் பறிபோனது

    அடுத்து பேசிய ஆரி, சோமுக்கு கேப்டன்சி எல்லாமே நூலிழையில் பறிபோனது. அந்த வலி என்ன என்று நமக்கு தெரியும். அவர் ரொம்பவே கஷ்டப்பட்டார். டிக்கெட் டூ ஃபினாலேவுக்கு அவர் தகுதியானவர் என்றார்.

    மனசுக்கும் குணத்துக்கும்..

    மனசுக்கும் குணத்துக்கும்..

    அவரை தொடர்ந்து பேசிய கேபி மற்றும் ஷிவானி, சோமுக்கு டிக்கெட் டூ ஃபினாலே கிடைத்தது சந்தோஷம். அதற்கு அவர் தகுதியானவர்தான் என்றனர். தொடர்ந்து பேசிய பாலாஜி, சோம் மனசுக்கும் குணத்துக்கும் கிடைத்த பரிசு இது என்றார். கடைசியாக பேசிய ரம்யா சைலன்ட்டா இருந்து கடைசியில் ஆக்ஷனில் காட்டிவிட்டார் என்றார்.

    English summary
    Som wins the ticket to the finale. House mates say he deserves to be in the finale.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X