டிக்கெட் டூ ஃபினாலேவை தட்டியது இவர்தான்.. கண்ணீர் கடலான பிக்பாஸ் வீடு.. வெளியானது இரண்டாவது புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில் பேசிய கமல் இறுதி போட்டிக்கு இன்னும் ஒரு வாரம் தான் உள்ளது. ஒருவர் வெளியேற வேண்டும் என்று கூறினார்.

வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை புரமோக்களில் தான் கமல் எவிக்ஷன் குறித்து பேசுவார். மாறாக இன்றைய புரமோவிலேயே கமல் எவிக்ஷன் குறித்து பேசியதால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் உள்ளதா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.

பினாலே டிக்கெட்

பினாலே டிக்கெட்

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. இதில் நிகழ்ச்சி தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன், டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் வாழ்த்துகள் சோம் என்று கூறுகிறார்.

ஸ்க்ரீனால் மறைக்கப்பட்ட..

ஸ்க்ரீனால் மறைக்கப்பட்ட..

தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் சேர்ந்து சோம சேகருக்கு ஃபினாலே டாஸ்க்குக்கான டிக்கெட்டை கொடுக்கின்றனர். இதனை தொடர்ந்து லிவிங் ஏரியாவில் ஸ்க்ரீன் போட்டு மூடப்பட்டுள்ள ஒரு படம் வைக்கப்பட்டுள்ளது. அந்த ஸ்க்ரீனை விலக்க சொல்கிறார் கமல்.

சோம் ஹேப்பி

சோம் ஹேப்பி

அப்போது ஸ்க்ரீன் விலக்கப்பட சோம சேகரின் போட்டோ அதில் உள்ளது. அதனை பார்த்த சோம சேகர், நான் எனக்காகவும் மகிழ்ச்சியடைகிறேன், இங்குள்ள அனைவருக்காகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறுகிறார்.

கண்ணீர் விடும் சோம்

கண்ணீர் விடும் சோம்

தொடர்ந்து ஜூம் காலில் வரும் சோம்மின் அம்மா, சோம் ரொம்ப சந்தோஷம்ப்பா என்கிறார். அதனைக் கேட்ட சோம், அழாத அம்மா என்கிறார். அதற்கு அம்மா அழ மாட்டேன் என்று கூற, சோம் அழும் காட்சிகள் காட்டப்படுகின்றன. இப்படியாக உள்ளது இன்றைய இரண்டாவது புரமோ.

சோம் வெற்றி

சோம் வெற்றி

கடந்த வாரம் முழுக்க டிக்கெட் டூ ஃபினாலே என பல டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன. இதன் இறுதியில் யார் அதிக பாயிண்ட்ஸ் பெறுகிறாரோ அவருக்கே ஃபினாலேவுக்கான டிக்கெட் என்று கூறியிருந்தார் பிக்பாஸ். அதன்படி சோம் அந்த ஃபினாலே டிக்கெட்டை பெற்றுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X