என்னா கோபம்.. ஆரியிடம் அப்படி சீறிய சோம்.. அதுதான் காரணம்.. பதறவைத்த ஆர்க்யூமென்ட்!

சென்னை: பிக்பாஸ் வீட்டில் டீம் பிரிக்கும் போது ஆரிக்கும் சோமுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பதற வைத்தது.

Recommended Video

பாலாவை தெளிய வைத்த ஆரி, இனி ஆட்டம் ஆரம்பம் | Bb4 Day 64 Highlights | Oneindia Tamil

பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டனாக அனிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனித்து விளையாடும் போட்டியாளர்கள் எல்லாம் வெளியேற்றப்படுவதால் அடுத்த வாரம் நான்தான் வெளியேறுவேன் என்று புலம்பினார் அனிதா.

ஆனால் அவரை கேப்டனாக்கி குளிர வைத்தார் பிக்பாஸ். இதனை தொடர்ந்து, லிவிங் ஏரியாவில் ஹவுஸ்மேட்டுகளை அழைத்து அமர வைத்த அனிதா, டீம் பிரித்தார்.

சோமை மாற்றலாம்

சோமை மாற்றலாம்

அப்போது கிட்சன் டீமுக்கு ஆள் பிரித்தார் அனிதா. அதில் சோம் இடம் பெறவில்லை. இதனை கவனித்த ஆரி, சோம் ரெண்டு வாரமா கிட்சன் டீமுக்கு வரவில்லை, ஆகையால் ஆஜித்துக்கு பதில் சோமை கிட்சன் டீமில் மாற்றிக் கொள்ளலாம் என்றார்.

ஆரியிடம் சீறிய சோம்

ஆரியிடம் சீறிய சோம்

இதனால் கடும் கோபமடைந்த சோம், நீ ரெண்டு வாரமா பாத்ரூம் டீம்முக்கு போகவில்லை அதை போய் பார் என அப்படி சீறினார். அதற்கு ஆரி நான் பார்க்க மாட்டேன் என்று சொல்லவில்லையே. கொடு பார்க்குறேன். அர்ச்சனா 7 வாரமா கிட்சன் டீமில்தான் இருக்கிறார், அவரை ரிலாக்ஸ் செய்ய வேண்டும் என்று கூறினேன் என்றார்.

ஏன் மூஞ்சை காட்ற?

ஏன் மூஞ்சை காட்ற?

உடனே வரிந்துக்கட்டிய நிஷா, எல்லாரும் பாத்ரூம் பார்க்குறாங்க. யாரும் பார்க்காமல் இல்லை என்று தன் பங்குக்கு பேசினார். அப்போது பேசிய ஆரி, ஏன்கிட்ட ஏன் இப்படி மூஞ்சை காட்ற என கேட்க, நான் செஞ்சதை மட்டும் கரெக்ட்டா கணக்கு வச்சுருக்கல்ல, நீ முதல்ல செய் என்றார் சோம்.

யார் கேப்டன்?

யார் கேப்டன்?

அவர்களுக்குள் நடந்த வாக்குவாதத்தை பார்த்த ரம்யா, அனிதாதான் டிஸிஷன் எடுக்குறாங்கள்ல, அப்படியே விடுங்க என்றார். அப்போதும் கோபம் குறையாத சோம், யார் கேப்டன்னு தெரியல, அனிதாதான கேப்டன் என்று ஆரியை மறைமுகமான விளாசினார்.

நீதான் சொல்ற நாங்க இல்ல

நீதான் சொல்ற நாங்க இல்ல

அதற்கு பதில் சொன்ன ஆரி, போன வாரம் நிஷாவ வைஸ் கேப்டனா நாமதானே மாத்த சொன்னோம் என்று கேட்க, நாமன்னு சொல்லாத நீதான் சொன்ன. எல்லாத்தையும் நீதான் சொன்ன என்று மீண்டும் மல்லுக்கட்டினார். டீம் பிரிக்கப்பட்டு அனைவரும் எழுந்து செல்லும் போது, என்கிட்ட இப்படி பேசாத என்று சோமிடம் கூறினார் ஆரி.

அர்ச்சனாவின் குரலாக

அர்ச்சனாவின் குரலாக

அதற்கு நான் வேற ஒரு ஃபீலிங்கில் இருந்தேன். நீ அப்படி சொன்னதும் எனக்கு சுர்ன்னு ஏறிடுச்சு, வேற ஒன்னும் இல்ல என்று ஆரியை கட்டியணைத்து சமாதானப்படுத்தினார். ஏற்கனவே அர்ச்சனா, நாம் என்ன செய்கிறோம் என்பதை ஆரி அப்படியே கண்காணிக்கிறார் என்று கூறி வரும் நிலையில் அதன் பிரதிபலிப்பாக பாய்ந்தார் சோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X