பிக்பாஸ் வீட்டை விட்டு வந்த பிறகு ரம்யாவிடம் மறைமுகமாக காதலை சொல்லும் சோம்? இன்ஸ்டா பக்கத்த பாருங்க!
சென்னை: பிக்பாஸ் பிரபலமான சோம சேகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரம்யா பாண்டியன் குறித்த போட்டோக்களையும் மீம்களையும் ஷேர் செய்து வருகிறார்.
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு விஜய் டிவியில் தொடங்கியது. பெரும்பாலும் திரைத்துறைக்கு சம்பந்தப்பட்ட பிரபலங்களை வைத்தே இதுவரை 4 சீசன்களை கடந்து விட்டது.
ஒவ்வொரு சீசனிலும் பிக்பாஸ் வீட்டில் ஒரு காதல் மலர்வது வாடிக்கையான ஒன்று.

மருத்துவ முத்தம்
முதல் சீசனில் பங்கேற்ற நடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவை வெறித்தனமாக காதலித்தார். ஆனால் ஆரவ் ஓவியாவின் காதலை ஏற்கவில்லை. இருந்த போதும் ஓவியாவுக்கு முத்தம் கொடுத்து அதற்கு மருத்துவ முத்தம் என்றும் பெயர் வைத்தார் ஆரவ்.

மகத் யாஷிகா காதல்
அடுத்து ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற நடிகர் மகத்துக்கும் நடிகை யாஷிகாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. மகத்துக்கு ஏற்கனவே வெளியில் காதலி இருந்தபோதும் யாஷிகாவை காதலித்தார். இருப்பினும் வெளியில் வந்த பிறகு அவர்களின் காதல் நீடிக்கவில்லை.

பல கோண காதல்கள்
அதனை தொடர்ந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் காதலுக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. முக்கோண காதலையும் தாண்டி பல கோண காதல் மிரளவிட்டது. மூன்றாவது சீசனில் பங்கேற்ற அபிராமி, முதலில் கவினை காதலித்தார்.

ஏற்க மறுத்த முகென்
ஆனால் அவருக்கும் சாக்ஷிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதனால் கவினை மறந்து முகெனை காதலிக்க தொடங்கினார். ஆனால் முகென் தனக்கு வெளியில் காதலி இருப்பதாக கூறி அபிராமியின் காதலை ஏற்கவில்லை.

ஷெரின் ஒருதலை காதல்
அதேநேரத்தில் லாஸ்லியா கவினை காதலிக்க தொடங்கினார். இதனை அறிந்த கவின் சாக்ஷியை கழட்டிவிட்டு லாஸ்லியாவை காதலிக்க தொடங்கினார். இந்த காதல் ஒரு புறம் இருக்க, நடிகை ஷெரின் சக போட்டியாளரும் மாடலுமான தர்ஷனை காதலித்தார்.

பிக்பாஸ் சீசன் 4ல்
இதற்கிடையில் மீரா மிதுன் தர்ஷனை காதலித்தார். ஆக மூன்றாவது சீசனில் காதல் கதைகளுக்கு குறைவே இல்லாமல் இருந்தது. இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 4ல் பெரிதாக சொல்லும் அளவுக்கு காதல் ஒன்றும் இல்லை.

பாலாஜிக்கு ஆயா வேலை
ஆனால் பாலாஜியும் ஷிவானியும் நெருக்கமாக பழகினார்கள். பாலாஜிக்கு ஊட்டிவிடுவது, அவரை மடியில் படுக்க வைத்து மசாஜ் செய்து விடுவது என இருந்து வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் ஒரு பக்கம் விமர்சிக்க, பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா, பாலாஜிக்கு ஆயா வேலை செய்ய வந்தீயா என கேட்டு லெப்ட் அன்ட் ரைட் வாங்கினார்.

அன்பாய் கொடுக்கப்பட்ட சாக்லேட்
இதனிடையே ரம்யா பாண்டியன் சகபோட்டியாளரான சோம சேகரை ஒரு தலையாக காதலித்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றதுமே சோமுவுக்கு சாக்லேட்டை கொடுத்தார் ரம்யா பாண்டியன். அந்த சாக்லெட்டை நீண்ட நாட்கள் சாப்பிடாமல் வைத்திருந்த சோம சேகர் அன்பு கேங்கின் கேலி கிண்டலுக்கு பிறகு ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தார்.

சோமை மச்சான் என்று..
பிக்பாஸ் ஃபினாலே நாளில் பிக்பாஸ் வீட்டில் இருந்து புறப்படும் போது தான் சாக்லேட்டை சாப்பிட்டு முடித்துவிட்டதாக கூறி வெறும் கவரை அவரிடம் கொடுத்து விட்டு சென்றார். அதை வாங்கிய ரம்யா பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார். முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ரம்யா பாண்டியனின் சகோதரர் சோமை மச்சான் என்று அழைத்தார்.

மறைமுகமாக காதல்..
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்துள்ள நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரம்யா பாண்டியனின் போட்டோக்கள் மற்றும் அவர் குறித்த மீம்ஸ்களை வெளியிட்டு வருகிறார். இதனை பார்த்த நெட்டிசன்கள், என்ன சோமே ரம்யாகிட்ட மறைமுகமாக காதலை சொல்கிறீர்களா என கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











