கிட்சன் ஏரியாவில் அமர்ந்து அனிதாவை வச்சு செய்த சோம்.. இன்னைக்குதான்ப்பா வாய திறந்திருக்காரு!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில் சோம சேகர் அனிதாவை தன்பாட்டுக்கு கலாய்த்து தள்ளினார்.
Recommended Video
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் கேப்டனாக ஆரி உள்ளார். அனிதா கிட்சன் டீமில் உள்ளார்.
ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் சமைக்காமல் ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்துக்கொண்டும் பேசி கொண்டும் நேரத்தை கழித்தனர்.

பொங்கலுக்கு சைட்டிஷ்
பொங்கலுக்கு சாம்பார் வைக்க பருப்பு இல்லை என கூறி ஆவாட்டினார் அனிதா. என்ன சமைக்கலாம், பொங்கலுக்கு சைட்டிஷ் என்ன செய்வது என்று பேசிக் கொண்டே இருந்தனர்.

முடிவே பண்ணலையா?
அப்போது கிட்சன் அருகே அமர்ந்திருந்த சோம், போன வாரம் இந்நேரத்தில் நாங்கள் சமைத்தே முடித்துவிட்டோம். இன்னும் என்ன சமைப்பது என்றே முடிவு செய்யவில்லையா என கலாய்த்தார்.

கிள்ளுவது அடிப்பது
ஆனால் ஆரம்பத்தில் இருந்தே சிடுசிடுவென இருந்த அனிதா, உனக்கு என்ன வேணும் என சோமிடம் எகிறினார். சோம் எனக்கு பசிக்குது என்று கேட்ட போதும் அவரை கிள்ளுவது, அடிப்பது என்று இருந்தார்.

பதிலுக்கு பதில்..
இருந்த போதும் விடாத சோம் அனிதாவை தொடர்ந்து கலாய்த்துக் கொண்டிருந்தார். அனிதா பேசிய பேச்சுக்கெல்லாம் கைகளை தட்டியும், பதிலுக்கு பதில் கவுண்ட் கொடுத்தும் ரகளை செய்தார்.

வாயை திறந்திருக்கிறார்
அனிதாவை தொக்கு என்றும் தக்காளி என்றும் அழைத்து கிண்டலடித்தார். மேலும் ரியோ மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகியோருடன் சேர்ந்தும் கலாய்த்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் இப்போதுதான் வாயை திறந்திருக்கிறார் சோம்.


Click it and Unblock the Notifications











