நிஷா பண்ண அந்த காரியம்.. ரியோ, சோமுக்கே அப்படி வெறுப்பானா.. மத்தவங்க நிலைமை.. இது அன்சீன் புரமோ!

சென்னை: நாய்கள் ஜாக்கிரதை என்பது போல, பேசி செல்லும் நிஷாவிடம் என்ன பண்ண முயற்சி பண்ற என ரியோ கேட்க, ஃபன் என சொல்லிவிட்டு நிஷா நகரும் அன்சீன் புரமோ வெளியாகி உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இன்னைக்கு ஒரு புரமோவாவது விடுவாங்களான்னு எதிர்பார்த்த நிலையில், அன்சீன் புரமோ வரை அசராமல் விட்டு ரசிகர்களை நகர விடாமல் செய்துள்ளனர்.

சோமசேகர் நிஷாவை கலாய்க்கும் விதம் தான் புரமோவில் வேற லெவல் ஹைலைட்.

மீண்டும் வீட்டுக்குள்

மீண்டும் வீட்டுக்குள்

மழை நீர் வடிந்து வீட்டுக்குள் மீண்டும் போட்டியாளர்கள் வந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று எப்படியோ கமல் சார் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தியும் முடித்திருப்பார்கள் என்றே தெரிகிறது. காலை முதல் மூன்று புரமோக்கள் வெளியாகி வைரலான நிலையில், அன்சீன் புரமோவும் மிஸ் ஆகாமல் வந்துவிட்டது.

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதை

நாய்கள் ஜாக்கிரதையா? ரியோ ஜாக்கிரதையா? எதை சொல்கிறார் நிஷா என்று தெரியாத அளவுக்கு அன்சீன் புரமோவின் முதல் வசனம் கேட்கிறது. என்னத்த சொல்ல ட்ரை பண்ற என ரியோவே கேட்க, ஃபன் என சொல்லும் நிஷாவின் அட்டகாசத்தை எல்லாம் புரமோவை போலவே அன்சீனிலேயே வைத்து விடுங்கள்.

சோம் பங்கம்

சோம் பங்கம்

நிஷாவின் காமெடி எல்லாம் டிவியில் பார்க்க சகிக்கலை என்றும், அப்படி எல்லாம் தயவு செஞ்சு பண்ணாத என நிஷாவை செம ரியாக்‌ஷனோடு சோமசேகர் கலாய்த்து பங்கம் பண்ணுவது வேற லெவல் காமெடி. தொடர்ந்து, நிஷாவை ஹர்ட் பண்ணும் விதமாக சோம் ஓட்டு ஓட்டென ஓட்டுகிறார். இவங்களுக்குள்ள சண்டை நடக்காம இருந்தா சரி.

வெறுப்பு ஆகுது

வெறுப்பு ஆகுது

நிஷா காமெடி என்கிற பெயரில் கன்ஃபெஷன் ரூமுக்குள் கால் பண்ணி பண்ண கலாட்டாவை பார்த்து, எங்களுக்கே இப்படி வெறுப்பு ஆகுதே, டிவியில பார்க்குறவங்க எப்படி வெறுப்பு ஆவாங்கன்னு சொல்லி கலாய்த்ததும், ரியோ, எத்தனை தடவை சொல்றது அந்த ஜோக் நல்லா இல்லை என மொத்தமாக கிண்டல் அடிக்கும் காட்சிகள் அன்சீனில் இடம்பெற்றுள்ளன.

ஸ்கெட்ச் யாருக்கு

ஸ்கெட்ச் யாருக்கு

இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை வெளியேறப் போறது யாரு என்கிற கேள்விக்கு நாளைக்கே சமூக வலைதளத்தில் விடை கிடைத்து விடும். சம்யுக்தாவா? நிஷாவா? என்கிற ரீதியில் தான் கெஸ்சிங் இதுவரை சென்றுக் கொண்டிருக்கிறது. ராஜா வீட்டு கன்னுக்குட்டி ஜித்தன் ரமேஷும் இதுக்கு மேல நான் வீட்டுக்குப் போய் தூங்குறேன் என கிளம்பவும் வாய்ப்புகள் அதிகம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X