பகவான் குமாரு.. வரவங்க எல்லாமே ஆரி ஃபேனாவே இருக்காங்களே.. சோம் தம்பி என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: புரமோவில் கூட காட்டாமல் சர்ப்ரைஸாக நிகழ்ச்சியில் சோமசேகரின் சகோதரர் லத்தேஷ் கலந்து கொண்டார்.

ஆரியை பார்த்து பகவான் என்றும், அவருக்கும் பகவான் குமார் என்றும் பட்டம் கொடுத்து சமூக வலைதளத்தில் பாராட்டுக்களை அள்ளி வருகிறார்.

மேலும், ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களுடனும் ஜாலியாக அரட்டை அடித்து எல்லோரும் நண்பர்கள் தான் என ரசிகர்களுக்கும் அறிவுறுத்தியது சிறப்பு.

ஷிவானி அம்மா மட்டுமே

ஷிவானி அம்மா மட்டுமே

இதுவரை வந்த பிக் பாஸ் வீட்டுக்குள் ஷிவானி அம்மா, பாலா பிரதர், ரம்யாவின் அம்மா மற்றும் தம்பி, ரியோவின் மனைவி கடைசியாக சோமின் தம்பி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்து சென்றிருக்கின்றனர். இதில், ஷிவானியின் அம்மா மட்டுமே தனது மகளை திட்டித் தீர்த்து பிக் பாஸுக்கு செம கன்டென்ட் மற்றும் டிஆர்பியை எகிற வைத்தார்.

சோம் தம்பி

சோம் தம்பி

ரம்யா குடும்பத்தினரை தொடர்ந்து ரியோவின் மனைவி வந்து சென்றார்கள், இன்னைக்கு அவ்வளவுதான் என நினைக்கும் போது கடைசியாக சோமசேகரின் தம்பி லத்தேஷ் கடைசியாக உள்ளே நுழைந்து செம ஃபன் பண்ணி அனைத்து ஹவுஸ்மேட்களையும் அரவணைத்து வாழ்த்தி சென்றார்.

பகவான் குமார்

பகவான் குமார்

பிக் பாஸ் வீட்டுக்கு வருபவர்கள் எல்லாம் ஆரியின் ரசிகர்களாகவே உள்ளது தான் இந்த வீட்டில் இத்தனை நாட்கள் தனியா விளையாடியதற்கு ஆரிக்கு கிடைத்த பலன் என்றே சொல்லலாம். பிக்பாஸ் வீட்டில் நண்பர்கள் இல்லை என்றாலும், பிக் பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்கள் எல்லாம் ஆரியை மதிப்பதும் ஆரியை ரசிப்பதும் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு இந்நேரம் உள்ளுக்குள் ஒரு போராட்டத்தையே கிளப்பி இருக்கும். குமார் அட்டியில் கடைசியில் ஆரியையும் சேர்த்து பகவான் குமார் என பட்டம் கொடுத்து விட்டார் லத்தேஷ்.

சோமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்

சோமுக்கு ஒரே ஒரு அட்வைஸ்

85 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் நீ இருக்கக் காரணம் உன்னுடைய கேம் தான். அதை இன்னும் தெளிவாக விளையாடு, கருத்துக்களை இன்னும் ஓப்பனாக முன் வை, இன்னும் 3 வாரங்கள் தான் சூப்பராக விளையாடி ஜெயித்து விட்டு வா என அட்வைஸ் செய்தார். வீடியோவில் அம்மாவும் சோமை வாழ்த்தினார்.

ஷிவானி ஹேப்பி

ஷிவானி ஹேப்பி

ஆஜீத் பாட வைத்து, அண்ணன் சோமை வாயிலேயே மியூசிக் போட வைத்து, கேபி ரியோ ஆட, ஷிவானியும் கூட சேர்ந்து பாட என செம க்யூட்டாக அனைவரையும் என்டர்டெயின் பண்ணிவிட்டு சென்றார் சோமசேகரின் சகோதரர். பிக் பாஸ் எல்லார் வீட்டிலேயேயும் தப்பான ஆட்களை போட்டியாளராக இந்த சீசனில் அழைத்து வந்துவிட்டார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

Recommended Video

Rio குழந்தை Rithi ஏன் வரவில்லை Rio மனைவி விளக்கம் - Filmibeat Tamil
அனைவருமே நண்பர்கள்

அனைவருமே நண்பர்கள்

மேலும், கடைசியாக வெளியே போகும் போது குமார் அட்டையை போட வைத்து, இங்கே இருக்க யாரும் எதிரிகள் அல்ல, எல்லாருமே நண்பர்கள் தான், சந்தோஷமாக விளையாடுங்கள், மக்களே வெளியே வீணாக சண்டை போட்டுக் கொள்ள வேண்டாம், எல்லாரையும் சமமாக ஆதரியுங்கள் என்று கூறி விட்டு சென்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X