twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கேபி, சாராவுடன் வீட்டுக்குச் சென்ற சோமசேகர்.. ஆரத்தி எடுத்து என்னவொரு வரவேற்பு.. வைரலாகும் வீடியோ!

    |

    சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே வரை வந்த சோமசேகர் வீடு திரும்பிய நிலையில் அவருக்கு உற்சாகமாக ஆரத்தி எடுத்து வரவேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.

    Recommended Video

    Bigg Boss Som Sekhar க்கு ஆரத்தியுடன் வரவேற்ப்பு | Winner of HEARTS

    பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு மீண்டும் தங்கள் சொந்த வீட்டுக்கு போகும் போது போட்டியாளர்களை ஹேப்பியாக வரவேற்பது வழக்கம் தான்.

    விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு!விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு!

    105 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து விட்டு ஏகப்பட்ட ரசிகர்களின் அன்பை பெற்ற சோமசேகர் வீட்டுக்கு செல்லும் போது, அவருடன் கேபி மற்றும் அர்ச்சனாவின் மகள் சாராவும் வீட்டுக்கு சென்ற வீடியோவை பார்க்கும் போதே உண்மையான அன்பு வெளிப்படுகிறது.

    எப்போவுமே பாசிட்டிவிட்டி

    எப்போவுமே பாசிட்டிவிட்டி

    பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொண்ட சோமசேகர், பிக் பாஸ் வீட்டில் எப்போதுமே பாசிட்டிவ் நிறைந்த மனிதராகவே இருந்தார். அன்பு கேங்கில் ஐக்கியமாக இருந்தாலும், மற்றவர்களிடம் பகைமையை பாராட்டாமல் நட்பு பாராட்டியே கடைசி வரை ஹேப்பியாக இருந்தவர் சோம் தான்.

    ஜெயிலுக்கு போகல

    ஜெயிலுக்கு போகல

    ரம்யா பாண்டியனை போலவே பிக் பாஸ் வீட்டின் ஜெயிலுக்குப் போகாமல் இருந்த இறுதிப்போட்டியாளர் சோமசேகர் தான். ஆனால், கடைசி வரை கேப்டனும் ஆகாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏகப்பட்ட முறை கேப்டன் பதவிக்கான போட்டிக்கு நாமினேட் செய்யப்பட்ட சோமசேகர் கேப்டன் போட்டிக்கான டாஸ்க்கில் போராடி சொதப்பினார்.

    முதல் ஆளாய்

    முதல் ஆளாய்

    டிக்கெட் டு ஃபினாலேவை வென்று முதல் ஆளாக கிராண்ட் ஃபினாலேவுக்கு சென்ற சோமசேகர், கிராண்ட் ஃபினாலேவில் முதல் ஆளாய் வெளியேறினார். பிக் பாஸ் 3வது சீசன் டைட்டில் வின்னர் முகேன் ராவ் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று, சில பல போட்டிகளை நடத்தி ட்விட்ஸ்ட் கொடுத்து சோமசேகரை வெளியேற்றினார்.

    கேபிரியோம்

    கேபிரியோம்

    வயசான காலத்திலும் கொஞ்சம் கூட ஸ்பிரிட்டை விடாமல் விளையாடிய சுரேஷ் தாத்தா மட்டும் கடைசி வரை இருந்திருந்தால் அவர் தான் இந்த சீசன் டைட்டில் வின்னர். கேபி, தாத்தாவின் ரசிகராக தொடங்கி கடைசியில் கேபிரியோம் ரசிகராக மாறினேன் என ஏகப்பட்ட ரசிகர்கள் இந்த மூவரது நட்பையும் பாராட்டி வருகின்றனர்.

    அன்பு கேங் ரீயூனியன்

    அன்பு கேங் ரீயூனியன்

    பிக் பாஸ் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலேவில் கமல் கொடுத்த கதர் ஆடைகளை உடுத்திக் கொண்ட அன்பு கேங் 6 பேரும் ஒன்றாக ரீயூனியன் ஆகி எடுத்துக் கொண்ட அட்டகாச புகைப்படமும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அன்பு கேங் மொத்தமும் வரிசைக்கட்டி எவிக்ட் ஆகிடுச்சுன்னும் ஏகப்பட்ட மீம்கள் பறந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆளப்போறான் சோம்

    மெர்சல் படத்தின் ஆளப்போறான் தமிழன் பாடல் ஒலிக்க, சோமசேகர் நீல நிற காரில் தனது வீட்டுக்கு கெத்தாக வந்து இறங்கினார். ஆரத்தி எடுத்து சோமசேகரை அவரது குடும்பத்தினர், குட்டி சுட்டீஸ் என அனைவரும் சேர்ந்து வரவேற்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    கேபியும் சாராவும்

    கேபியும் சாராவும்

    சோமசேகரின் அன்பு தங்கைகளான கேபியும் அர்ச்சனாவின் மகள் சாராவும் சோம் கூடவே அவர் வீட்டுக்கு சென்றது ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. இது தான் உண்மையான அன்பு என்றும், சோமசேகர் அந்த அன்பை எப்போதுமே கைவிடமாட்டார் என்றும், சோமுக்கும் சினிமாவில் வாய்ப்புகள் குவிய வேண்டும் என்றும் ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

    English summary
    Somashekar home coming video goes viral in social media. Gabriella and Archana’s daughter Zaara also come along with Somshekar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X