காப்பாத்துனதுக்கு நன்றி மக்களே.. வைரலாகும் பிக் பாஸ் பிரபலத்தின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்.. நடத்துங்க!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரம் சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேறினார்.
ஆனால், முன்னதாக சுரேஷ் சக்கரவர்த்தி வெளியேற மாட்டார் சோமசேகர் தான் வெளியேறுவார் என அரசல் புரசலாக தகவல் வந்தது.
இந்நிலையில், சோமசேகரை காப்பாற்றிய மக்களுக்கு நன்றி என அவரது இன்ஸ்டாகிராமில் வெளியாகி உள்ள போஸ்டர் வைரலாகி வருகிறது.

பொய்யான கணக்கு
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நாமினேஷன்கள் பட்டியல் வெளியானதும் இந்த வாரம் சோமசேகர் தான் வெளியேறுவார் என பிக் பாஸ் பற்றிய கணக்குகளை முன் கூட்டியே சொல்லும் பிக் பாஸ் புலிகள் கூறி வந்தனர். அதற்கான சில காரணங்களையும் லாவகமாகவே அவர்கள் அடுக்கினர். ஆனால், கடைசியில் சுரேஷ் தாத்தா டாட்டா காட்டி விட்டார்.

நல்லா குழப்பிய பிக் பாஸ்
சோமசேகரை தலைவராக்காமல் சம்யுக்தாவை தலைவராக்கிய நிலையில், போன வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சோமசேகர் தான் வெளியேறுவார் என அனைவரையும் தான் நினைத்தபடியே நம்ப வைத்தார் பிக் பாஸ். ஆனால், கடைசியாக செம ட்விஸ்ட் வைத்து சுரேஷ் சக்கரவர்த்தியை வெளியேற்றினார். ஆனால், அந்த ட்விஸ்ட்டும் வெள்ளியன்றே வெளியாகி வீணாகி விட்டது.

சுரேஷ் ஜோசியம்
சோமசேகருக்கு ஜோசியம் பார்க்கும் போதும், உங்க நிலைமை பிக் பாஸ் வீட்டில் ஊசல் ஆடுகிறது என சுரேஷ் தாத்தாவை வைத்து சொல்ல வைத்தனர். ஆனால், கடைசியாகத் தான் தெரிந்தது, அந்த ஜோசியம் சோமசேகருக்கு அல்ல, ஜோசியக்காரருக்கு என்று என பிக் பாஸ் ரசிகர்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

இன்னும் விளையாடணும்
பாலாஇ முருகதாஸ் ஆரம்பத்தில் இருந்தே முரட்டுத் தனமாக பிக் பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார். ரொமான்ஸ் ஏரியாவிலும், சண்டை போடுவதிலும், செம ஸ்கோர் செய்து ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பாலாஜி யார் என்றும் புரிய வைத்து விட்டார். ஆனால், சோமசேகர் இன்னமும் அமைதியாக இருக்கிறார் என்றும், அவர் இன்னும் நல்லா விளையாடணும் என்றும் ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

நன்றி மக்களே
அழகியத் தமிழ் மகன் போட்டி, எம்.எம்.ஏ ஃபைட்டர், விளம்பர நடிகர், சூரரைப் போற்று படத்தில் நடித்துள்ளார் என ஏகப்பட்ட பெருமைகளுக்கு சொந்தக்காரரான சோமசேகரின் இன்ஸ்டாகிராமை உபயோகித்து வரும் அவருக்கு மிகவும் வேண்டியவர்கள், காப்பாற்றியதற்கு நன்றி மக்களே என வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டியில் அரசியல்வாதி போல சோமசேகர் இருக்கும் புகைப்படத்தை போட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள போஸ்ட் வைரலாகி வருகிறது.

ரொமான்ஸ்
ரியோ ராஜுடன் நல்ல ஒரு கெமிஸ்ட்ரியில் விளையாடி வரும் சோமசேகர், கேபி, அனிதா என எல்லாரையும் ஓட்டி வருகிறார். இதற்கு மேலும், இவரை சும்மா வைத்திருந்தால், இறுதி வரை கொண்டு செல்ல முடியாது என நினைத்த பிக் பாஸ், ரம்யா பாண்டியன் உடன் ரொமான்டிக் டிராக்கில் டாஸ்க் மூலம் கணவன் மனைவி ஆக்கி உள்ளனர். பிசிக்கல் டாஸ்க்கில் கலக்கும் ரம்யாவின் 'ஓம்' ரொமான்ஸிலும் கலக்குகிறாரா? என்பதை பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











