Just In
- 21 min ago
வாவ்.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு விருது.. செம ஆப்ட்.. யாருக்கு என்னென்ன விருதுன்னு பாருங்க!
- 36 min ago
சிரிக்கும் சிங்கம்.. ரம்யா பாண்டியனை வாழ்த்திய கமல்.. கலக்கலா உள்ளே போய் கூட்டிட்டு வந்த கவின்!
- 1 hr ago
ஃபைனலிஸ்ட்டுகளுக்கு பரிசு கொடுத்த கமல்.. வேற லெவல்.. யார் யாருக்கு என்னன்னு பாருங்க!
- 1 hr ago
சிரி ரியோ.. எல்லோரையும் ஹேப்பி பண்ணிட்டு வரணும்.. ஆர்டர் போட்ட ஸ்ருதி.. கமலுடன் உரையாடிய ரியா!
Don't Miss!
- News
கமல்ஹாசனுக்கு காலில் அறுவைச் சிகிச்சை.. பிரச்சாரத்துக்கு பிரேக்விட்டு சில நாட்கள் ஓய்வு எடுக்கிறார்!
- Finance
48% அதிகரிப்பாம்.. பெட்ரோல், டீசல் மீதான வரியால் தூள் கிளப்பிய வரி வசூல்.. !
- Automobiles
20-இன்ச் அலாய் சக்கரங்களுடன் கியா சொனெட் காரை பார்த்திருக்கீங்களா?! இங்க பாத்துக்கோங்க
- Sports
வலிமையான அணிகள் மோதும் 62வது போட்டி... பரபர அனுபவத்திற்கு தயாராகும் ரசிகர்கள்!
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Lifestyle
வார ராசிபலன் 17.01.2021 முதல் 23.01.2021 வரை – இந்த ராசிக்காரர்களுக்கு லாபம் நிறைந்த வாரமிது…
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
என்ன மச்சானும் மச்சானும் மோதிக்கிறாங்க.. அடுத்த சண்டை ஆரம்பம்.. ஆரியா? சோமா? கலக்கல் புரமோ!
சென்னை: இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது பிக் பாஸ் நிகழ்ச்சி.
எப்படியாவது டைட்டிலை தட்டிச் செல்லவேண்டும் என பலரும் குரலை உயர்த்தி பேசத் தொடங்கி உள்ளனர்.
இன்றைய மூன்றாவது புரமோவில் ஆரிக்கும் சோமசேகருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது ரசிகர்களை வியப்படைய செய்துள்ளது.
டுபாக்கூர் பாலாஜி அதுக்குதான் பிளான் பண்றாரு.. ஆரியை சூதானமாய் இருக்க சொல்லும் நெட்டிசன்ஸ்!

சோமுக்கும் கோபம் வரும்
பிக் பாஸ் வீட்டில் தனது கோபத்தை வெளிக்காட்ட கூடாது என அர்ச்சனாவின் கேங்கில் ஐக்கியமாகி அமைதியாக இருந்து வந்த சோமசேகரை, அர்ச்சனா சென்ற பிறகு ரியோ நன்றாகவே சூடேற்றி வருகிறார். இன்றைய நிகழ்ச்சியில் சோமசேகரும் வெடித்து சிதறப் போவதை உறுதி செய்துள்ளது மூன்றாவது புரமோ.

ஆரிக்கும் சோமுக்கும்
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி உடன் தான் ஹவுஸ்மேட்கள் சண்டை போட்டுக் கொண்டனர். அதன் பின்னர் பாலாவுக்கும் சனமுக்கும் இடையே சண்டை வெடித்தது. ஆனால், ஆரம்பம் முதல் இப்போது வரை ஹவுஸ்மேட்கள் வலுவான போட்டியாளரான ஆரியை டார்கெட் செய்வதிலே குறியாக இருக்கின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் ஆரிக்கும் சோமுக்கும் இடையே பந்து பிடிப்பதில் பிரச்சனை நடந்துள்ளது.

ஆரி vs ஹவுஸ்மேட்ஸ்
ஆரியுடன் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் சண்டையிட்டு தங்களை வெளிக்காட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆரியும் தொடர்ந்து தன்னை மாற்றும் முயற்சியில் இறங்கினாலும் ஹவுஸ்மேட்கள் அவரை மறுபடியும் பழையபடியே கோபப்படுபவராகவே மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருவதாகவே தெரிகிறது.

அடிச்சி புடிச்சி விளையாடலாம்
இன்றைய மூன்றாவது புரமோவில் ஃபர்ஸ்ட் தொடக் கூடாது, அப்புறம் அடிச்சி புடிச்சி விளையாடலாம் என ஆரி பேசிய வார்த்தையை பிடித்துக் கொண்டு அடிச்சி புடிச்சி விளையாடலாம்னுலாம் சொல்லக் கூடாது என சோமசேகர் எகிற, ஆரிக்கும் சோமுக்கும் வாக்குவாதம் வளர ஆரம்பித்து விட்டது.

நான் பண்ணது தப்புடா
நான் பால தொட்டேனா என்று சோமிடம் பதிலுக்கு ஆரி கேட்க, நான் பண்ணது தப்புடா.. உன்னை கேட்டுருக்கக் கூடாதுடா? என தனது வாதத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் சோமசேகர். இடையே அனிதா பஞ்சாயத்து பண்ண முயற்சித்தும் அவருக்கு இருவரும் இடம் கொடுக்கவில்லை.

மச்சானுக்கும் மச்சானுக்கும்
ஆரியை இந்த பிக் பாஸ் வீட்டில் பலரும் அண்ணா என அழைக்க, அவரை அன்போடு மச்சான் என அழைத்து வருவது சோமசேகர் தான். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் மச்சானுக்கும் மச்சானுக்கும் சண்டை முட்டிக் கொண்டது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நிச்சயம் இன்றைய நிகழ்ச்சியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது.