twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஞ்சு பேர் இருந்தும் வொர்த் இல்லை.. வேஸ்ட் பாலா.. ரியோவும் ரம்யாவும் செம கேடி! சூப்பர் ஸ்கோர்!

    |

    சென்னை: பாலாஜி முருகதாஸ் டீமில் 5 பேர் இருந்தும் வெறும் பத்து ரூபாய் சின்ன பந்துகளையே பிடித்து வருகின்றனர்.

    எதிரணியில் ரியோ மற்றும் ரம்யா பெரிய பந்துகளாக பிடித்து முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    இரண்டாம் சுற்றிலும் திறமையாக ஆடி தங்கள் அணியை வெற்றியை நோக்கி நகர்த்தி வருகின்றனர்.

    நான் பண்ணது தான் தப்பு.. அடிச்சி புடிச்சி விளையாடலாம்.. மோதிக் கொண்ட ஆரியும் சோமும்.. தெறிக்குது!நான் பண்ணது தான் தப்பு.. அடிச்சி புடிச்சி விளையாடலாம்.. மோதிக் கொண்ட ஆரியும் சோமும்.. தெறிக்குது!

    ஆரி தான் கேப்டன்

    ஆரி தான் கேப்டன்

    சோமசேகர் மற்றும் கேபியை இரு கேப்டன்களாக பிரிக்க பாலா நினைத்த நிலையில், நான் விளையாடினால் தான் கும்பலாக ரியோ மற்றும் சோமுடன் தான் விளையாடுவேன் என கேபி கேப்டன்சியை ஏற்கவில்லை. அதனையடுத்து, ஆரியை ஒரு டீமுக்கும் சோமை இன்னொரு டீமுக்கும் பாலா கேப்டனாக்கினார்.

    ஆரி அணியில்

    ஆரி அணியில்

    ஆரி, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஷிவானி, ஆஜீத் என ஆரியின் அணியில் மொத்தம் 5 பேர் உள்ளனர். இது அன்ஃபேர் என்று ஆரி கூட ஏன் பேசவில்லை என்கிற கேள்வி பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எதிரணியில் ரியோ ராஜ், சோமசேகர், கேபி மற்றும் ரம்யா விளையாடி வருகின்றனர்.

    யாருக்கு வெற்றி

    யாருக்கு வெற்றி

    பந்து பிடிக்கும் பால் கேட்ச் டாஸ்க்கின் முதல் சுற்றில் 5 பேர் கொண்ட ஆரி, பாலா இருக்கும் அணி 5 பத்து ரூபாய் சின்ன பந்துகளை பிடித்து 50 புள்ளிகள் மட்டுமே சேர்த்தது. ஆனால், சோமசேகர் அணியில் 20 ரூபாய் பந்துகள் மூன்று, 10 ரூபாய் பந்துகள் மூன்று என மொத்தம் 90 புள்ளிகளை பெற்று முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.

    செம கேடி

    செம கேடி

    பாலா டீமில் இருப்பவர்கள் எல்லாம் சரியான வாழைப் பழங்களாக இருக்கின்றன. ஆனால், சோமின் அணியில் உள்ள ரியோவும் ரம்யாவும் செம கேடிகள். பெரிய பந்துகள் வந்தாலே லபக்கென பிடித்து தங்கள் கூடையில் போட்டு அணியின் வெற்றிக்கு வித்திட்டு வருகின்றனர். வேற லெவல் விளையாட்டு!

    எதிரியை உடைக்க

    எதிரியை உடைக்க

    அதே போல ரியோ அணியினர் பாலாவின் டீமை உடைக்க அழகாக சோமசேகரை வைத்து சண்டையையும் போட்டு வருகின்றனர். கோபத்தில் டென்ஷனாகி பாலா தனது கேமை குறைத்துக் கொண்டது தான் அந்த அணி குறைந்த அளவிலான பந்துகளை எடுக்க காரணமாக இருந்தது என்கிற குற்றச்சாட்டுகளும் சமூக வலைதளத்தில் பிக் பாஸ் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

    Recommended Video

    ஒட்டு கேட்டுட்டு பேசுறாரு ஆரி | ஓவர் ரியாக்ட் பண்ண அனிதா
    மொக்கை டாஸ்க்

    மொக்கை டாஸ்க்

    பகல், இரவு என விளையாட வேண்டும் என்கிற இந்த டாஸ்க்கும் ஏன் இவ்வளவு மொக்கையாக இருக்கிறது என்றும், போட்டியாளர்களின் பலத்தை சோதிக்காமல், அவர்களை வைத்து சண்டையையும் சர்ச்சையையும் எப்படி உருவாக்கி டிஆர்பியை ஏற்றலாம் என்பதை மட்டுமே இந்த சீசன் பிக் பாஸ் டீம் கடைசி வரை ஆடி வருவதாகவும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    English summary
    Somashekar, Rio, Ramya and Gaby team won the first round of Ball task. Aari, Bala, Anitha, Aajeedh and Shivani team scored least in first round.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X