twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நல்லா இருக்கே டீலிங்.. ரம்யாவிடம் நல்லா ரொமான்ஸ் பண்றப்பா சோமே.. கலாய்க்கும் ரசிகர்கள்!

    |

    சென்னை: கோழியாக இருக்கும் ரம்யாவிடம் நரியாக இருக்கும் சோமசேகர் டீலிங் போடுவது போல பண்ணும் ரொமான்ஸை கண்டுபிடித்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    பிக் பாஸ் வீடு இந்த வாரம் கோழிப்பண்ணையாக மாறிவிட்டது. தங்க முட்டை கிடைப்பவர்கள், கோழியாக விளையாடி தங்கள் முட்டைகளை நரிக்கூட்டத்திடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.

    இந்த லக்சரி டாஸ்க்கையும் ஃபேவரிஸத்தோடு தான் பலர் அணுகி வருவது கண்கூடாகத் தெரிகிறது.

    கோழியான ரம்யா

    கோழியான ரம்யா

    நரிக்கு எவன் டா கோழி வேஷம் கொடுத்தது என புரமோவில் ரம்யாவை பார்த்த உடனே மீம்கள் பறந்தன. கோழியாக இருந்த நிலையில், நரித் தந்திரத்தோடு தான் ரம்யா பாண்டியன் தனது ஆட்டத்தை ஆடினார். நரியிடமிருந்து தங்க முட்டையை காப்பாற்ற வேண்டும் என்கிற டாஸ்க்கை மாற்றி காசு சம்பாதிக்க நரியுடனே டீலிங் வைத்தது அவுட் ஆஃப் தி பாக்ஸ் திங்கிங்!

    நல்லா இருக்கே டீலிங்

    நல்லா இருக்கே டீலிங்

    டீலிங் பண்றேங்கிற பேரில் இருவரும் அப்படியே கொஞ்சி கொஞ்சி பேசுவதை பார்த்த ரசிகர்கள் சோம் நல்லா வழியுறானப்பா என கலாய்க்கத் தொடங்கி விட்டனர். மேலும், ரம்யாவின் கோழி டிரெஸ்ஸை பிடித்துக் கொண்டும், தலையில் மாட்டியிருக்கும் குல்லாவை தொட்டு விளையாடிக் கொண்டும் மிகவும் நெருக்கமாக பேசிய டீலிங் ரொம்ப நல்லா இருக்கு என கமெண்ட்டுகள் பறந்தன.

    முட்டையை உடைத்த பாலா

    முட்டையை உடைத்த பாலா

    ரம்யா சோம் போட்ட டீலிங்கையே பாலாவும் சோமிடம் போட முற்பட, அதிலிருந்து சோம் விலகிக் கொண்டார். பின்னர், அப்பாவி ஆஜீத்தை அழைத்து அவருடன் டீலிங் போட்ட பாலா. முட்டையை அடை காப்பது போல அவரோட மொத்த வெயிட்டை போட்டு அதில் ஏறி உட்கார, கோழி மிதிச்சி குஞ்சி செத்த கதையாக முட்டையே ரெண்டா உடைஞ்சிப்போச்சு. அந்த நேரத்தை பயன்படுத்தி சோம் ரம்யாவின் முட்டையை தொட்டுவிட்டார்.

    ஏமாந்த அர்ச்சனா

    ஏமாந்த அர்ச்சனா

    ரம்யாவிடம் அர்ச்சனாவும் ஒரு டீலிங் போட்டார். தானும் சோமும் உன்னை பின்னாடி இருந்து காப்பாற்றுகிறோம். எங்களுக்கு 40 - 40 ரூபாய் கொடுத்துவிடு என்று, ஆனால், பாலாவின் முட்டை உடைந்த பரபரப்பின் போது அர்ச்சனா அங்கே இல்லாத நிலையில், சோம் முட்டையை தொட்டதும், அர்ச்சனா டீலிங்ல தானே சோம் இருந்தான் என்றதும், அது வேற டீல் என அர்ச்சனாவுக்கு ரம்யா பல்பு கொடுத்தார்.

    Recommended Video

    ACTING IDEA இப்போதைக்கு இல்ல | KAADHAL SANDHYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL
    கேமரா

    கேமரா

    கேமராவுக்கு முன்னாடி நின்று, பிக் பாஸ் நாங்க போட்ட திட்டம்படி சோம் எனது முட்டையை தொட்டுவிட்டார். அதனால், இருவரும் பிக் பாஸ் கரன்சியை பிரித்துக் கொள்கிறோம் என சொல்லிவிட்டு தங்களுடைய சூப்பரான கேமை இருவரும் படு ரொமான்ஸ் லுக்குடன் ஆடி வருகின்றனர். இந்த ரம்யாவை புரிந்து கொள்ளவே முடியலயே சிரித்தே சமாளித்து விடுகிறார் என ரசிகர்களும் புலம்பித் தவிக்கின்றனர். உடைந்து போன முட்டைக்கு ஆஜீத் சொந்தம் கொண்டாடியது அதை விட காமெடி!

    English summary
    Somashekar romance Ramya Pandian while talking about dealing in golden egg task. And also both played very well to their game too.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X