பத்து வருஷத்துக்கு முன்னாடி.. அழகிய தமிழ்மகன்.. சோம் இது 2020.. பிக் பாஸ் வீட்ல என்ன செஞ்சீங்க?
சென்னை: மறுபடியும் பத்து வருஷத்துக்கு முன்னாடி அழகிய தமிழ்மகன் போட்டியில் கலந்த பழைய கதையை சொல்ல ஆரம்பித்த சோமசேகரை அப்படியே ஸ்டாப் பண்ண பிக்பாஸ், இப்போ இந்த 60 நாட்களில் என்ன செஞ்சீங்கன்னு மட்டும் சொல்லுங்க என வச்சி செஞ்சிட்டார்.
Recommended Video
நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில், கடந்த 60 நாட்களாக உங்களோட பங்களிப்பு என்ன என பிக் பாஸ் போட்டியாளர்களை தனித்தனியாக அழைத்து கேள்வி கேட்டார்.
கூட்டத்தில் கேட்டால், ஒருத்தர் சொல்வதை வைத்தே, மற்றவர்களும் அப்படியே ஈயடிச்சான் காப்பி அடிக்கிறார்கள் என்பதை நன்றாகவே புரிந்து வைத்துள்ளார் பிக் பாஸ்.

பத்து வருஷத்துக்கு முன்னாடி
2010ல இதே விஜய் டிவியில அழகிய தமிழ்மகன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஃபைனல் வரைக்கும் போனேன். அதன் பிறகு எதுவுமே பெருசா செய்யல. என்னோட ரசிகர்கள் எல்லாம் ஏதாவது செய்யணும் என என்னை ஊக்கப்படுத்தி வந்தாங்க, அப்போ கிடைச்ச இந்த பிக் பாஸ் வாய்ப்பை பயன்படுத்திக்க நினைச்சேன் என சோம் ஆரம்பித்ததும், பழைய கதை வேண்டாம், இப்போ என்ன பண்ணீங்கன்னு பிக் பாஸ் நோஸ் கட் பண்ணார்.

ரசிகர்களுக்கு நன்றி
புரியுது பிக் பாஸ் என மறுபடியும் பேச ஆரம்பித்த சோமசேகர், இந்த வீட்ல பாட்டு பாடினேன், மேளம் தட்டினேன், கொடுத்த டாஸ்க்கை எல்லாம் செஞ்சேன். திக்குவாயை மறந்து பேச ஆரம்பிச்சேன். ரியோ, அர்ச்சனாலாம் ரொம்ப ஹெல்ப் பண்ணாங்க, ரசிகர்களுக்கும், நான் கும்பிடுற சாமிக்கும் ரொம்பவே நன்றி என்றார். மறுபடியும் குறுக்கிட்ட பிக்பாஸ், இது அந்த ஷோ இல்லை என குட்டு வைத்தார்.

அட்வைஸ் கொடுக்காதீங்க
அதன் பிறகும் என்னத்த பேசுவது என தெரியாமல் புலம்ப ஆரம்பித்த சோமசேகர், கமல் சார் சொன்னார் உங்களுக்கு இருக்க பிரச்சனை சரியாகிடும் என்று, என்ன போல இருக்கவங்களுக்கும் சொல்றேன், உங்களாலயும் சாதிக்க முடியும் என பேச ஆரம்பித்த நிலையில், சோம் அட்வைஸ் கொடுக்காதீங்க என மறுபடியும் குட்டு வைத்தார்.

தடுமாறிய சோம்
யோவ் பிக் பாஸ், நான் இவ்ளோ நேரம் தாக்குப்பிடிச்சி பேசியதே பெரிய விஷயம். வெளியே ஒருத்தன் என்ன வேர்க்கடலை சாப்பிடுறேன்னு கலாய்ச்சிக்கிட்டு இருக்கான். நீங்களும் கூட்டி வந்து நல்லா அசிங்கப்படுத்தாதீங்க என்கிற ரேஞ்சுக்கு, ரொம்ப பாவமா, நான் சண்டை போடலன்னு நினைக்காதீங்க, சண்டை போடாமலும் ஜெயிக்கலாம்னு சோம் பேச ஆரம்பித்ததும் பஸர் அடித்து தம்பி நீங்க வெளியே போலாம் என பிக் பாஸ் துரத்திவிட்டார்.


Click it and Unblock the Notifications











