ஹீரோயின்கள் ஓகே சொல்லலாம் ஆனா நாங்க ஓகே சொல்லமாட்டோம்.. லிப் லாக் காட்சியில் நடிக்க மறுத்த நடிகர்கள்

சென்னை: ஹீரோயின்கள் ஓகே சொல்லியும் லிப் லாக் காட்சியில் சில நடிகர்கள் நடிக்க மறுத்துவிட்டதாக புதிய தகவல் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

சினிமா எடுக்கும் தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் அந்தப் படத்தின் ஹிட்டும், அதன் மூலம் வரும் வருமானமும்தான் முக்கியம்தான். அந்த வருமானத்துக்காக படத்தை தீவிரமாக ப்ரோமோட் செய்வார்கள். குறிப்பாக படத்தில் லிப் லாக் காட்சிகள் இருந்தால் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்க வருவார்கள் என்பது அவர்களது திண்ணமான நம்பிக்கை. ஆரம்பத்தில் தமிழி சினிமாவில் லிப் லாக் என்றாலே கொலை குற்றமாக பார்க்கப்பட்டது.

some actors have refused to act in the lip lock scene despite the heroines saying OK

மாற்றிய கமல் ஹாசன்: ஆனால் அந்த விதியை உடைத்து எறிந்தவர் கமல் ஹாசன். கமல் படம் என்றாலே கண்டிப்பாக லிப் லாக் இருக்கும் என்ற விதி அவரது நடிப்பில் வெளியான உத்தம வில்லன் படம்வரைக்கும் இருந்தது. அந்தக் காட்சிகளுக்கு இளைஞர்கள் மத்தியில் வரவேற்பு இருந்தாலும் குடும்பத்துடன் கமல் படத்தை பார்க்க முடியாது என்ற கருத்து எழுந்ததையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதேபோல் ரஜினிகாந்த் இதுவரை ஒரு லிப் லாக் காட்சியில்கூட நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தச் சூழலில் தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் லிப் லாக்குக்கு ஓகே சொல்லியும் ஹீரோக்கள் மறுத்த தகவல் வெளியாகியிருக்கிறது.

உதயநிதி ஸ்டாலின்: விநியோகஸ்தராக இருந்து தயாரிப்பாளராக மாறி நடிகராக இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். பெரிய இடத்திலிருந்து வந்தாலும் எந்த ஈகோவும் இல்லாமல் மற்றவர்களுடன் சகஜமாக பேசுபவர். அவர் நடிக்க வந்தபோதே யாருடனும் நெருக்கமாக நடிக்கக்கூடாது என கண்டிஷன் போட்டவர் அவர் மனைவி கிருத்திகா. சூழல் இப்படி இருக்க கலகத்தலைவன் படத்துக்காக ஒரு லிப் லாக் காட்சியை படமாக்க மகிழ் திருமேனி திட்டமிட்டதாகவும் அதற்கு நிதி அகர்வால் ஓகே சொல்லியும் உதயநிதி பதறிப்போய் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன்: நடுத்தர குடும்பத்திலிருந்து வந்து ஒருவர் தமிழ்நாடே கொண்டாடும் ஹீரோவாக மாறலாம் என்பதற்கு பெரிய உதாரணம் சிவகார்த்திகேயன். பலர் அவரை தங்களது வீட்டு பிள்ளையாகவே நினைத்துகொண்டிருக்கின்றனர். அதை தக்க வைப்பதற்காகவும் அவர் கடுமையாக உழைத்துவருகிறார். பிரின்ஸ் படத்தில் லிப் லாக் காட்சி இருந்ததாகவும் அதற்கு சிவகார்த்திகேயனோ ஸ்ட்ரிக்ட்டாக நோ சொல்லிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

some actors have refused to act in the lip lock scene despite the heroines saying OK

விஜய் சேதுபதி: மக்கள் செல்வன் என்று மக்களால் கொண்டாடப்படுபவர் விஜய் சேதுபதி. பல டெம்ப்ளேட்டுகளை உடைத்து நடித்துக்கொண்டிருப்பவர். இதன் காரணமாக அவர் மீது சினிமாவிலும், சினிமாவை தாண்டியும் பெரிய மரியாதை இருக்கிறது. அவர் 96 படத்தில் நடித்தபோது படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் த்ரிஷாவுக்கு லிப் லாக் கொடுப்பது போன்றுதான் சீன் இருந்ததாம்.

ஆனால் விஜய் சேதுபதியோ அதற்கு முடியவே முடியாது. அப்படி லிப் லாக் போன்று காட்சி இருந்தால் படம் முழுக்க இருந்த எமோஷன் ஒரு சீனில் அடிபட்டுவிடும் என்று கூறி ஸ்ட்ரிட்டாக மறுத்துவிட்டாராம். இந்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அடேங்கப்பா எவ்வளவு நல்லவங்களா இருக்காங்க என ஜாலி கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X