சில ஹீரோக்களை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டாங்க!

சென்னை : நீண்ட வருடங்களாக நடிக்காமல் இருந்த வடிவேலு இப்பொழுது மீண்டும் திரையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

முன்னணி காமெடியனாக மட்டுமல்லாமல் பல படங்களில் ஹீரோவாகவும் நடித்த வடிவேலுக்கு மக்கள் பெரும் ஆதரவை அளித்தனர்

இந்த நிலையில் சில ஹீரோக்களை என்கிட்ட இருந்து பிரித்துவிட்டனர் என வடிவேலு ஒப்பனாக கூறியுள்ளார் .

மீண்டும் திரையில் காண

மீண்டும் திரையில் காண

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் வடிவேலுவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். தனது அசத்தலான காமெடியின் மூலம் பாடி லாங்குவேஜால் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்த வடிவேலு கடந்த சில வாரங்களாகவே படங்களில் சரிவர நடிக்காமல் கண்ணீரில் மூழ்கி இருந்தார். பல்வேறு காரணங்களால் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த வடிவேலுவை அனைவரும் மீண்டும் திரையில் காண வேண்டும் என ஆசைப்பட்டனர்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்

மெர்சல்,கத்தி சண்டை, என ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் வடிவேலுவுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இப்பொழுது மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ளார் வடிவேலு. இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க காமெடி கதை களத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் கதாநாயகியே இல்லாமல் வடிவேலு மட்டும் வடிவேலுவுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டு வருகிறது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

ஹீரோக்களை சிலர் பிரித்து விட்டதாக

ஹீரோக்களை சிலர் பிரித்து விட்டதாக

அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்திலும் வடிவேலு காமெடியனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். எனவே வடிவேலுவை மீண்டும் திரையில் பார்க்க போகிறோம் என்ற சந்தோசத்தில் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ள நிலையில் தன்னிடம் இருந்து சில ஹீரோக்களை சிலர் பிரித்து விட்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஒருமையில் பேசி

ஒருமையில் பேசி

ஒரு படத்தில் காமெடி வெற்றி பெற வேண்டுமென்றால் காமெடியனுக்கும் ஹீரோவுக்கும் டைமிங்கி கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆக வேண்டும் அந்த வகையில் வடிவேலுவுக்கும் தமிழ் ஹீரோக்களுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகும். காமெடி என வந்துவிட்டால் யாராக இருந்தாலும் ஒருமையில் பேசித்தான் ஆக வேண்டும் அப்போதுதான் ஆடியன்ஸுக்கு பார்க்கும்பொழுது நேச்சுரலாக தோணும்.

மிகப்பெரிய ஹிட்

மிகப்பெரிய ஹிட்

எனவே வடிவேலுவும் பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து இருந்தாலும் அவர்களை படங்களில் ஒருமையில் பேசியும் திட்டியும் கலாய்த்தும் நடித்து காமெடி செய்து வந்தார். இதே போலத்தான் பிரண்ட்ஸ் படத்திலும் விஜய், சூர்யா என முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்து இருந்தது மிகப்பெரிய ஹிட்டடித்தது.

Recommended Video

Vadivelu Emotional Speech | Lyca Productions No.23 Film Launch Event
வாடா போடான்னு திட்டுகிறார்

வாடா போடான்னு திட்டுகிறார்

இந்த நிலையில் அவ்வாறு பேசி நடிக்கும் பொழுது ஒரு சில ஹீரோக்கள் இடம் நீங்க ஒரு ஹீரோ சார் அவர் காமெடியன் உங்களை போய் வாடா போடான்னு திட்டுகிறார் எனக்கூறி என்னிடமிருந்து சில ஹீரோக்களை பிரித்து விட்டார்கள் என வடிவேலு பேசியுள்ளார். வடிவேலு பேசியதை பார்த்து சில வலைதள வாசிகள் அவர் நடிகர் அஜித்துக்கும் தனக்கும் ராஜா படத்தில் நடந்த நிகழ்வை தான் குறிப்பிடுகிறார் என எண்ணுகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X