Sobhita: அம்மணி சரியான ஆளுதான் போல.. நாக சைத்தன்யாவை கைக்குள்ள வெச்சிருக்கும் சோபிதா யார் தெரியுமா?

ஹைதராபாத்: தெலுங்கு சினிமாவின் மிகவும் முக்கியமான நடிகர் நாகர்ஜுனா. இவருக்கு தமிழ்நாட்டிலும் ரசிகர்கள் உள்ளனர். இவரது மகன் நாக சைத்தன்யாவும் நடிகர். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரது திருமண வாழ்க்கை 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. அதாவது 2021ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக நாக சைதன்யா தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட பல கோடிகள் தொகையையும் சமந்தா வேண்டாம் என உதறித்தள்ளிவிட்டு, விவாகரத்து கொடுத்தார்.

இந்நிலையில் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நாக சைத்தன்யா பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகையான சோபிதா துலிபாலாவுடன் கடந்த சில ஆண்டுகளாக டேட் செய்து வந்ததாக கூறப்பட்டு வந்தது. இது குறித்து ஊடகங்கள் தரப்பில் இருந்து கேள்வி கேட்கப்பட்டபோதும் கூட, இருவரும் மறுப்பு தெரிவிக்காமல், வெறுமனே புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்து நழுவி வந்தனர்.

Naga Chaitanya Samantha

இந்நிலையில் இன்று அதாவது ஆக்ஸ்ட் 8ஆம் தேதி காலையில் இருந்து அனைத்து ஊடகங்களிலும் நாக சைத்தன்யாவுக்கும் சோபிதா துலிபாலாவுக்கும் நிச்யதார்த்தம் என தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் இதனை உறுதிப் படுத்தும் விதமாக, நாகர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில், நிச்யதார்த்த புகைப்படங்களை பகிர்ந்து இருவரையும் வாழ்த்தியுள்ளார். இந்நிலையில் யார் இந்த சோபிதா துலிபாலா என்ற கேள்வியை பலரும் எழுப்பி வருகின்றனர். அவர் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாடல்: ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட துலிபாலா, கடந்த 2013ஆம் ஆண்டு ஃபெமினா மிஸ் இந்தியா சவுத் பட்டத்தை வென்றார். மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்த சோபிதா துலிபாலா அதன் பின்னர் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். ராமன் ராகவ் 2.o என்ற இந்தி படத்தில் நடித்து, திரை உலகில் அறிமுகமானார். 2016ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நவசுதீன் சித்திக் உடன் நடித்தார்.

Naga Chaitanya Samantha

வானதி: இந்தி திரைப்படத்தில் இருந்து தனது திரை வாழ்க்கையைத் தொடங்கி இருந்தாலும், தென்னிந்திய சினிமாக்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார். குறிப்பாக தெலுங்கு, தமிழ், மலையாள மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றார். தமிழில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் நடித்த முதல் தமிழ் படம் இதுதான். படங்கள் மட்டும் இல்லாமல் வெப் சீரீஸ்களிலும் சோபிதா துலிபாலா நடித்து வருகின்றார்.

சமந்தா: இவருக்கும் நாக சைத்தன்யாவுக்கும் இன்றைக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்றைய தினமான ஆகஸ்ட் 8 என்பது சமந்தா நாக சைத்தன்யாவிடம் தனது காதலைச் சொன்ன நாள் என கூறப்படுகின்றது. இது குறித்த செய்திகளும் இணையத்தில் உலா வருகின்றது.

Naga Chaitanya Samantha

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X