உங்களைத்தான் நம்பி இருக்கோம்.. நீங்க வரணும்.. கோஷமிட்ட ரசிகர்கள்.. ரஜினி கொடுத்த ரியாக்சன் இதுதான்!
நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது.
Recommended Video
சென்னை: நேற்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் தீவிரமாக தயாராகி வருகிறது.தர்பார் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் .
நேற்று தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியானது. நடிகர் ரஜினிகாந்த் உடற்பயிற்சி செய்வது போல, பனியனில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.

என்ன பேட்டி
இந்த நிலையில் தர்பார் படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், தர்பார் படம் பொங்கலுக்கு வெளியாகிறது. தர்பார் படம் நன்றாக வந்துள்ளது. இந்த படம் மக்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இந்த பேட்டியில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடைபெற்றது.

எப்படி
இந்த பேட்டியின் போது நடிகர் ரஜினியிடம் அங்கிருந்த ரசிகர்கள்.. தலைவா தேங்க் யூ தலைவா.. தமிழ்நாட்டை காக்க வந்தது நீங்கதான் தலைவா.. உங்களைத்தான் நம்பி இருக்குறோம்.. அடுத்த தலைவர் நீங்கதான் தலைவா, என்று கூடி நின்று கோஷமிட்டனர்.

பதில் இல்லை
ஆனால் நடிகர் ரஜினிகாந்த் இதற்கு எந்த பதிலும் சொல்லவில்லை. இதற்கு எப்படி பதில் அளிப்பது என்று தெரியாமல் அவர் சுற்றி முற்றி பார்த்துக் கொண்டு இருந்தார். உடனே வேகமாக எல்லோருக்கும் தேங்க் யூ, தேங்க் யூ என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருந்தார்.

மீண்டும் மீண்டும்
அதன்பின் பேச்சை மாற்ற வேண்டும் என்பதற்காக, தர்பார் படம் நல்லா வந்து இருக்கு என்று குறிப்பிட்டார். ஆனால் ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் ''உங்களைத்தான் நம்பி இருக்கிறோம்'' என்று தொடர்ந்து கூறிக் கொண்டு இருந்தனர். ஆனால் ரஜினி இதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்து 2 வருடங்கள் ஆக போகிறது. ஆனால் இன்னும் அவர் முழுதாக அரசியலுக்கு வரவில்லை. அதேபோல் அவர் மிகவும் குறைவாகவே அரசியல் தொடர்பான பேட்டிகளை அளித்து வருகிறார்.

எப்போது வருவார்
எப்போதும் தன்னுடைய படங்கள் வெளியாவதற்கு முன் ஏதாவது சர்ச்சையாக பேட்டி கொடுப்பது ரஜினியின் வழக்கமாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு முன் அது போன்ற பேட்டி எதுவும் இதுவரை வரவில்லை. நேற்று சர்ச்சையாக வேண்டிய பேட்டியையும் நடிகர் ரஜினிகாந்த் நாசுக்காக தவிர்த்துவிட்டார்.

அரசியல் இல்லை
நேற்றைய பேட்டியில் அவர் அரசியல் தொடர்பான எந்த விதமான கேள்வியையும் எதிர்கொள்ளவில்லை. அரசியல் தொடர்பாக அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் சைலன்ட் மோடிற்கு சொல்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











