Jyotika Suriya: சூர்யாவை திடீரென கழட்டிவிட்ட ஜோதிகா.. மகள் தியா விஷயத்தில் இப்படி நடந்துக்குறாரே!

சென்னை: தமிழ் சினிமா தம்பதிகளில் பெரும்பாலான ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி என்றால் அதில் சூர்யா - ஜோதிகா ஜோடி எப்போதும் டாப் லிஸ்ட்டில் உள்ளது. சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களின் காதலுக்கு முதலில் சூர்யாவின் அப்பா சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை. அதன் பின்னர் ஒப்புக்கொண்டார். சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. சூர்யா ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற பெண் குழந்தை உள்ளது. தியா தற்போது ஆவணப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். மேலும் இந்த ஆவணப்படம் விருதுகளையும் வென்றுள்ளது. இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில் சூர்யாவை டேக் செய்யாதது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

அதாவது நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவின் மகள் தியா. சினிமா குடும்பத்தில் பிறந்த தியாவுக்கு சினிமா ஆர்வம் இல்லாமல் இருக்குமா? அதேநேரத்தில் சூர்யா, ஜோதிகா போன்ற பெற்றோர்கள் இருக்குபோது, சொல்லவா வேண்டும். அகரம் அறக்கட்டளை மூலம் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுக்கு ஆயிரக்கணக்கான குழந்தைகளை படிக்க வைத்து வருகின்றார் சூர்யா. இவர் தனது மகள் தியாவின் சினிமா ஆசையை நிறைவேற்றாமல் இருப்பார்களா? இன்னும் சொல்லப்போனால் மிகச் சரியாக கைகாட்டி பக்கபலமாக இருந்து ஊக்குவித்து வந்துள்ளனர்.

suriya jyotika jyotika suriya

ஆவணப்படம்: தியா தற்போது ஆவணப்படம் (Leading Light - The Untold Stories Of Behind The Scenes) ஒன்றை இயக்கியுள்ளார். இந்த ஆவணப்படம் ஊடகத்துறையில் கேஃபர்களாக பணியாற்றும் பெண்கள் குறித்தும் அவர்கள் எதிர் கொள்ளும் சிரமங்கள் குறித்தும் இந்த ஆவணப்படம் பேசுகின்றது. இந்த ஆவணப்படம், திரிலோகா இன்டர்நேஷனல் ஃபிலிம்பேர் விருதுகளில் இரண்டு விருதுகளை வென்றுள்ளது. சிறந்த ஆவணப்படத்திற்கான விருதினையும், சிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற விருதினையும் வென்றுள்ளார். ஆவணப்படம் மொத்தம் 13 நிமிடங்கள் 13 நொடிகள் இடம் பெற்றுள்ளது. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் இந்த அவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

suriya jyotika jyotika suriya

ஜோதிகா: ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் வென்ற பதங்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது மகள் இயக்கியுள்ள ஆவணப்படத்தின் யூடியூப் லிங்கினையும் பகிர்ந்துள்ளார். தனது மகளின் ஆவணப்படம் தொடர்பான இந்தப் போஸ்ட்டில் எதிலும் சூர்யாவை டேக் செய்யவில்லை. இது ரசிகர்களிடயே பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர், ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு வந்தால் வீட்டிற்குச் செல்வதில்லை எனவும், சிவக்குமார் வீட்டில் சாப்பிடுவதில்லை எனவும் பல கிசுகிசுக்கள் உலாவந்தது. இது தொடர்பாக ஜோதிகாவோ சூர்யாவோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

suriya jyotika jyotika suriya

பிரச்னை: இவர்களின் தயாரிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு உள்ள மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் ஜோதிகா பங்கேற்கவில்லை. அப்படி இருக்கும்போது, ஜோதிகா தனது மகள் குறித்த பதிவில் சூர்யாவை டேக் செய்யாதது பலருக்கும் பலவிதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக சூர்யாவுக்கும் ஜோதிகாவுக்கும் பிரச்னை போல, அதனால்தான் ஜோதிகா இவ்வாறு நடந்து கொள்கின்றார் என பலர் கமெண்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். மேலும் பலரோ என்ன பிரச்னையாக இருந்தாலும் சரி, இருவரும் சீக்கிரம் இணைந்துகொள்ள வேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

suriya jyotika jyotika suriya

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X