Jyotika: விஜய்க்கு எதிராக ஒரேபோடு? அட்டாக் மோடில் ஜோதிகா.. ஒரு கை பாக்காம விடமாட்டங்க போல!

சென்னை: இணையத்திற்குள் நுழைந்தாலே இரண்டு விஷயங்கள் தொடர்பாக ரசிகர்கள் மாறி மாறி அடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். ஒன்று கங்குவா மற்றொன்று நயன் - தனுஷ் பிரச்னை. கங்குவா படத்தினை கடந்த 14ஆம் தேதியில் இருந்து, அதாவது படம் ரிலீஸ் ஆன தினத்தில் இருந்து நெட்டிசன்கள் வறுத்து எடுத்தனர். அதேநேரத்தில் சூர்யாவின் தீவிர ரசிகர்கள் நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வந்தனர். அதன் பின்னர் நேற்று அதாவது நவம்பர் 16ஆம் தேதி மதியத்தில் இருந்து கங்குவாவைக் கழட்டிவிட்டுவிட்டு, தனுஷுக்கு நயன் எழுதிய அறிக்கை குறித்து சூடாக விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்.

நிலவரம் இப்படி இருக்க இன்று அதாவது நவம்பர் 17ஆம் தேதி அடங்கி இருந்த கங்குவா நெருப்பினை ஜோதிகா மீண்டும் பற்றவைத்தார் என்றுதான் கூறவேண்டும். கங்குவா படம் குறித்தும் படத்தின் விமர்சனங்கள் குறித்தும் ஜோதிகாவின் கருத்து பலருக்கு ஏறுபுடையதாக இருந்தாலும், பலரும் ஜோதிகாவின் கருத்திற்கு எதிராக இணையத்தில் தொடர்ந்து பேசி வருகின்றனர். குறிப்பாக விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், ஜோதிகாவின், பதிவுக்கு மிகவும் காட்டமாக பதில் அளித்து வந்தார்.

jyotika vijay suriya kanguva

கோட் படக் காட்சி: இப்படியான நிலையில் ஜோதிகா தனது பதிவில் குறிப்பிட்டிருந்த சில விஷயங்கள் நடிகர் விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான தி கோட் படம் குறித்துத்தான் கூறியுள்ளார் என இணையவாசிகள் பலரும் கூறுகின்றனர். அதுமட்டும் இல்லாமல், ஜோதிகா கூறுவது கோட் படத்தின் இந்தக் காட்சியைத்தான் எனவும் பகிர்ந்து வருகின்றனர்.

jyotika vijay suriya kanguva

தரமற்ற படம்: அதாவது ஜோதிகா தனது பதிவில், " நான் படத்தின் வெற்றி தோல்விகள் குறித்துப் பேசவில்லை. நாங்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்விகளை எதிர்கொள்ள பல ஆண்டுகளாக உழைத்து பக்குவப்பட்டுள்ளோம். நேர்மையான படைப்புக்கு எதிர்மறையான விமர்சனங்கள் வருகின்றது. அதேநேரத்தில் தரமற்ற படத்திற்கு எதிராக கருத்து சொல்ல யாருக்கும் தைரியமில்லை" எனக் குறிப்பிட்டிருந்தார்.

jyotika vijay suriya kanguva

இரட்டை அர்த்தம்: ஜோதிகா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளது விஜய்யின் கோட் படத்தினைத்தான் என, கோட் படத்தின் காட்சிகள் பகிரப்படுகின்றது. குறிப்பாக சினேகா, லைலாவிடம் விஜய் வேறு ஒரு பொண்ணுடன் தொடர்பில் இருப்பதாக தனக்கு சந்தேகமாக இருப்பதாக கூறுவார். அந்தக் காட்சியில் விஜய் பேசுவது முழுக்க முழுக்க இரட்டை அர்த்த வசனமாகத்தான் காட்சிபடுத்தப்பட்டிருக்கும். அதனால்தான் சென்சார் குழு மியூட் செய்திருப்பார்கள். அந்தக் காட்சியை பகிர்ந்து ரசிகர்கள் ஜோதிகாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இப்படியான நிலையில் விஜய் ரசிகர்கள் ஜோதிகாவுக்கும் சூர்யா ரசிகர்களுக்கும் எதிராக இணையத்தில் குதித்துள்ளனர்.

jyotika vijay suriya kanguva

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X