Vettaiyan Trailer: விஜய்க்கு மீண்டும் பாடம் எடுக்குறாரா தலைவர்? ட்ரைலரில் இடம் பெற்ற அந்தக் காட்சி..

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள படம் வேட்டையன். இந்தப் படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க, ஜெய் பீம் படத்தினை இயக்கிய தா.செ. ஞானவேல் எழுதி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தில் சூப்பர் ஸ்டாருடன் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் ராணா டகுபதி, அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரைலர் இன்று அதாவது அக்டோபர் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. ட்ரைலர் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மேலும் ட்ரைலரில் இடம் பெற்றுள்ள ஒரு காட்சி விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் பாடம் எடுக்கின்றாரா என பலரும் கேள்வி எழுப்பியும் கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.

அதாவது ட்ரைலரில், ஒரு நிமிடம் 28வது நொடியில் கழுகு இடம் பெற்றுள்ளது. இது வேண்டுமென்றே வைக்கப்பட்ட காட்சி என்றும், இந்தக் காட்சி மூலம்தான் ரஜினி, விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் பாடம் எடுக்கின்றார் என கூறப்படுகின்றது. கழுகு ரஜினி நடித்த படம். இதுமட்டும் இல்லாமல், ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசிய பேச்சுகள் மிகவும் கவனம் பெற்றது. மேலும் தமிழ் திரையுலகில் பெரும் பேசுபொருளாகவும் மாறியது.

rajinikanth vijay vettaiyan trailer

சூப்பர் ஸ்டார் பேச்சு: ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகையில், ஒரு குட்டிக் கதை ஒன்றைக் கூறினார். அதில், காக்கா மற்றும் கழுகு ஆகியவற்றை வைத்து கதை கூறினார். ரஜினி கூறிய இந்தக் கதை விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் எடுக்கப்பட்ட பாடம் என ரஜினி ரசிர்கள் பலரும் இணையத்தில் பதிவிட்டனர். அதுமட்டும் இல்லாமல், அதில் கழுகு என்பது சூப்பர் ஸ்டார் ரஜினி என்றும் காக்கா என்பது விஜய் என்றும் பரவலாக பேசப்பட்டது.

விஜய் பேச்சு: இதையடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில் அவரது பேச்சு சூப்பர் ஸ்டாருக்கும் அவரது ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்ததாக பலரும் கூறினர். அதாவது லியோ இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசுகையில், அவரும் ஒரு குட்டிக் கதை சொன்னார். அப்போது காக்கா, கழுகு என்ற வார்த்தையைக் கூறினார். அப்படிக் கூறிவிட்டு மைக்கைவிட்டு நகர்ந்து சென்று சிரித்தார். அப்போது அரங்கமே சிரித்தது. மேலும் விஜய், ரஜினிகாந்த்திற்கு பதிலடி கொடுத்துவிட்டார் எனவும் விஜய் ரசிகர்கள் கூற ஆரம்பித்தனர். விஜய்யின் இந்த நடவடிக்கை, அவருக்கும் ரஜினிகாந்த்துக்கும் இடையிலான பனிப்போரை உறுதி செய்யும் விதமாக அமைந்தது. இதுமட்டும் இல்லாமல் லியோ படத்தின் க்ளைமேக்ஸில் விஜய், ஒரு கழுகைப் பார்த்து, 'என்னடா.. எப்படி இருக்க’ என பேசுவார்.

எடுக்க வேண்டிய பாடம்: அதேபோல், லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், இந்த சலசலப்புக்கு முடிவு கட்டினார் ரஜினி என பேசப்பட்டது. ஆனால் வேட்டையன் படத்தின் ட்ரைலரிலேயே இப்படியொரு காட்சி இடம் பெற்றிருப்பது, விஜய் மற்றும் விஜய் ரசிகர்களுக்கு ரஜினி எடுக்கவேண்டிய பாடம் இன்னும் இருக்கின்றது என ஒரு தரப்பினர் பேசி வருகின்றனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பூரண குணமடைய விஜய் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X