பெண்ணின் அந்த இடத்தில் அப்படி ஒரு ஷாட்.. வாழ்த்து வசவு.. கலந்துக்கட்டி வாங்கும் சர்ச்சை இயக்குநர்!
சென்னை: பெண்ணின் அந்த இடத்தில் அப்படி ஒரு ஷாட் வைத்ததற்காக பிரபல சர்ச்சை இயக்குநர் வாழ்த்துகளையும் வசவுகளையும் வாங்கிக்கட்டி வருகிறார்.
Recommended Video
சர்ச்சை இயக்குநர் என்றால் சட்டென ஞாபகத்துக்கு வரும் பெயர் ராம் கோபால் வர்மா. இவர் ஏராளமான இந்தி படங்களையும் தெலுங்கு படங்களையும் இயக்கியிருக்கிறார்.
ராம் கோபால் வர்மா தற்போது இயக்கி வரும் படம் க்ளைமேக்ஸ். இந்தப் படத்தில் அவரது ஆஸ்தான நடிகையான அமெரிக்காவின் பார்ன் ஸ்டார் மியா மல்கோவா நடித்துள்ளார்.

பாலைவனத்தில்
படத்தின் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில் கடந்த வாரம் படத்தின் டீசர் வெளியானது. படத்தின் ட்ரெயிலர் நேற்று வெளியானது. அதன்படி ஆளில்லா பாலைவனத்தில் தனிமையை கொண்டாடும் காதல் ஜோடி மர்ம கும்பல் ஒன்றிடம் சிக்கி தவிப்பதாக உள்ளது.

அடல்ட் காட்சிகள்
காதலனை கடத்திச் செல்லும் அந்த மர்ம கும்பலிடம் இருந்து காதலனை மீட்க தனியாகவும் நிர்வாணமாகவும் நாயகி திரிவதாக தெரிகிறது. லிப்லாக், செக்ஸ் என அடல்ட் காட்சிகளுக்கு பஞ்சம் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ட்ரெயிலரின் ஒரு ஷாட்டுக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒன்றாக எழுந்துள்ளது.

கீழே உதிக்கும் சூரியன்
அதாவது காதலனை காணாத சோகத்தில் பாலைவனத்தின் மணல் பரப்பில் உள்ளாடைகளுடன் குப்புற படுத்திருக்கிறார் நாயகி. அப்போது அவரது அந்தரங்க உறுப்புக்கு கீழே சூரியன் உதிப்பது போன்று ஒரு ஷாட் வைத்திருக்கிறார் இயக்குநர்.

அடுத்த லெவல்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை புகழ்ந்தும் விமர்சித்தும் கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர். இந்த ஷாட்டை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் இந்த நெட்டிசன், சார் இது அடுத்த லெவல் என பாராட்டியுள்ளார்.

சூரியனால் கூட முடியல
மற்றொரு நெட்டிசனான இவர், உலகின் நம்பர் ஒன் இயக்குநர் வர்மா என புகழ்ந்துள்ளார். வர்மாவின் இயக்கத்தில் மியா மல்கோவாவின் அழகை பார்த்து சூரியனால் கூட அதனை மறைக்க முடியவில்லை என பாராட்டியிருக்கிறார். அந்த சர்ச்சைக்குரிய ஷாட்டையும் ஷேர் செய்துள்ளார்.

வார்த்தைகள் இல்லை
ராம் கோபால் வர்மா ஷுட் செய்த அந்தக் காட்சியை தனது பக்கத்தில் ஷேர் செய்திருக்கும் இந்த நெட்டிசன், இதனை விவரிக்க வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளும் போதாது என்றும் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.

கேவலமான ஷாட்
மற்றொரு நெட்டிசனான இவர் ராம் கோபால் வர்மா, கொரோனாவை விட ஆபத்தானவர் என விளாசியிருக்கிறார். மற்றொரு நெட்டிசனான இவர், வேடிக்கையான மற்றும கேவலமான ஷாட் என ராம் கோபால் வர்மாவை சாடியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஆபாச பட இயக்குநர்
சமூகத்திற்கு பயனுள்ள படங்களை எடுங்கள்.. ராம் கோபால் வர்மாவின் ஹேட்டர்ஸ்களே தயாராகுங்கள்.. என தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார் இந்த நெட்டிசன். இதெல்லாம் ஷாட்டா, எதிர்காலத்துல ஆபாச பட இயக்குநர் ஆயிடுங்க.. உங்க படத்தோட டீசர்லாம் அப்படிதான் இருக்கு என தெரிவித்துள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











