Amaran: பையன் புடிச்சிட்டான்.. பயோபிக் படத்தில் காப்பியா? அமரனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..

சென்னை: தமிழ் சினிமாவில் பல ஹாலிவுட் படங்களை அப்படியே தழுவி, தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் ரீமேக் செய்து படத்தினை வெளியிடுவது வாடிக்கையான விஷயம்தான். அப்படி பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. பல படங்கள் தோல்வியும் அடைந்துள்ளது. அந்த வகையில் சொல்லப்போனால் நடிகர் ஜீவாவின் இரண்டு படங்களைக் குறிப்பிடலாம். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படம், பேட் மேன் படத்தின் தழுவல் என்றாலும், அந்தப் படத்தின் மேக்கிங்கில் சொதப்பல் ஏற்பட்டதால் படம் தோல்வியைச் சந்தித்தது. சமீபத்தில் வெளியான பிளாக் படம் கோஹரன்ஸ் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்படியான அதிகாரப்பூர்வ ரீமேக் படங்கள் பல மொழிகளில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்டாலும், ஒரு சில ஹாலிவுட் படங்களில் இருந்து காட்சிகளை மட்டும் நைஸாக உருவி, அதனை தமிழ் படத்தில் பல இயக்குநர்கள் பயன்படுத்துவது இங்கு வழக்கமான ஒன்றுதான். அப்படி ஹாலிவுட் படத்தின் காட்சியை சிவகார்த்திகேயனின் அமரன் படத்தில் இடம் பெற்றிருப்பதை ரசிகர்கள் சுட்டிக்காட்டி இணையத்தில் பரப்பி வருகின்றனர்.

sivakarthikeyan sai pallavi amaran

சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அமரன். இப்படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பயோபிக் படம் ஆகும். இந்தப் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்றும் ராஜ் கமல் நிறுவனம் இணைந்து தயாரித்தது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

அமரன் வசூல்: இந்நிலையில் படம் இதுவரை பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூபாய் 270 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து ரூபாய் 300 கோடிகள் வசூலை நோக்கி வேகமாகச் சென்று கொண்டு உள்ளது. இன்றைய காலகட்டத்தில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ஒரு சில படங்கள் மட்டுமே வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் பெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது.

sivakarthikeyan sai pallavi amaran

கங்குவா: சூர்யா போன்ற சீனியர் நடிகரின் நடிப்பில் மிகவும் பிரமாண்டமான கங்குவா படம் ரிலீஸ் ஆன பின்னரும் அமரன் படம் வசூலில் கெத்து காட்டி வருகின்றது. இப்படியான நிலையில் இணையவாசி ஒருவர் தனது எக்ஸ் பக்கத்தில், அமரன் படத்தில் இடம் பெற்றுள்ள காட்சியைப் பகிர்ந்து, அது ஏற்கனவே கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படத்தில் இடம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார்.

ஹாலிவுட் காப்பி: அதாவது அவர் பகிர்ந்துள்ள பதிவில், இயக்குநர் க்ளைண்ட் ஈஸ்ட்வுட் இயக்கத்தில் வெளியான படம், அமேரிக்கன் ஸ்னைப்பர். இந்தப் படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், இப்படத்தில் அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் தனது கணவருடன் பேசிக் கொண்டு இருப்பார். அப்போது எதிரிகள் அவர்களை நோக்கி சராமாரியாக சுடுவார்கள். அப்போது மனைவி மிகவும் பயப்படுவார். அதேபோன்ற காட்சி அமரன் படத்திலும் இடம் பெற்றுள்ளதால், படத்தினைப் பார்த்த ரசிகர், நல்ல இருக்குடா அமரன் வியாபாரம் எனக் கேப்ஷனிட்டு, இரண்டு படத்தின் காட்சிகளையும் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த இணையவாசிகள் பலர், பயோபிக் படத்திலும் காப்பியா எனக் கமெண்ட் செய்து வருகின்றார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X