Jawan - என்னது ஜவானில் ஷங்கர் பட, சர்கார் பட வாடைலாம் அடிக்குதா?.. போகப்போக விமர்சனம் வேற மாதிரி வருதே
சென்னை: Jawan Review (ஜவான் விமர்சனம்) அட்லீ இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜவான் படம் குறித்து ரசிகர்கள் சிலர் நெகட்டிவ் விமர்சனத்தையும் கூறிவருகின்றனர்.
தமிழில் நான்கு படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும் முன்னணி இயக்குநர் என்று பெயர் எடுத்துவிட்டார் அட்லீ. விஜய்யை வைத்து அவர் இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களில் பிகிலை தவிர்த்து தெறியும், மெர்சலும் மெகா ஹிட்டாகின. இதனால் விஜய்யுடன் ரொம்பவே நெருக்கமானார் அட்லீ. சூழல் இப்படி இருக்க ஹிந்தியில் என்ட்ரி கொடுத்திருக்கும் அட்லீ ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கியிருக்கிறார்.

ஜவான் ரிலீஸ்: ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் ஜவான் இன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தபோதே இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. படத்திற்கான ஹைப்பை ட்ரெய்லரும் ஏற்றிவைத்தது. அப்படி உச்சக்கட்ட ஹைப்போடும், வைபோடும் முதல் நாள் முதல் காட்சி பார்க்க ரசிகர்கள் படையெடுத்தனர்.
எப்படி இருக்கிறது படம்: படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும்பாலானோர் பாசிட்டிவ் விமர்சனங்களையே கொடுத்துவருகின்றனர். இதற்கு முன்பு ஷாருக் நடிப்பில் வெளியான பதான் படத்தைவிடவும் ஜவான் படம் பல மடங்கு மாஸாக இருக்கிறது என்றும். ஷாருக்கானை எப்படி காட்சிப்படுத்த வேண்டும் என அட்லீ பாலிவுட்டுக்கு பாடம் எடுத்திருக்கிறார் என்றும் ஏகத்துக்கும் புகழ்ந்துவருகின்றனர்.
இடைவேளை காட்சி: அதேபோல் படத்தின் இடைவேளை காட்சி கூஸ்பம்ப்ஸாக இருப்பதாகவும் சிலாகிக்கின்றனர் ரசிகர்கள். அதுமட்டுமின்றி விஷுவலாகவும் அட்லீ மிரட்டியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் இவ்வருடத்தின் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகும். பல படங்களின் வசூல் சாதனைகளை முறியடிக்கும் என ரொம்பவே கான்ஃபிடென்ஸாக கமெண்ட்ஸையும், ட்வீட்களையும் பெரும்பாலான ரசிகர்கள் பறக்கவிடுகின்றனர்.
ரமணா?: அதேசமயம் படத்தின் முதல் காட்சி முடிந்த சூழலில் இன்னொரு தகவலும் காத்துவாக்குல பறந்தது. அதாவது அட்லீ என்றாலே பிற படங்களின் இன்ஸ்பிரேஷனில்தான் தன்னுடைய படத்தை எடுப்பார் என்ற அடையாளம் அவரது முதல் படத்திலிருந்தே இருக்கிறது. அதே ஃபார்முலாவை பின்பற்றி இந்தப் படத்தையும் ரமணா இன்ஸ்பிரேஷனில் எடுத்திருக்கிறார் என பேசப்பட்டது.
புதிய விமர்சனம்: இந்நிலையில் முதல் காட்சியை பார்த்து முடித்தவர்களில் ஒருதரப்பினர் படம் குறித்து வேறு மாதிரி கூற ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது ஜவான் படத்தின் மையக்கரு என்பது இந்தியாவில் நடக்கும் ஊழல் மற்றும் தேர்தலில் செலுத்தும் வாக்கின் முக்கியத்துவம்தானாம். இதனையடுத்து சமூக வலைதளங்களில் சிலர்; என்னது இது படத்தின் மையக்கருவை கேட்டால் அட்லீயின் குருநாதர் ஷங்கர் படங்களீன் வாடையும், ஏ.ஆர்.முருகதாஸின் சர்கார் படத்தின் வாடையும் ஜவானில் அடிக்கும்போல என பேச ஆரம்பித்திருக்கின்றனர். படம் பார்த்தவர்களில் சிலரும் அப்படி கூறுவது கவனிக்கத்தக்கது.
அதேசமயம் மையக்கரு என்பது பொதுவானதுதான். அதை மையப்படுத்தி ஏராளமான படங்கள் வந்திருக்கின்றன. ஜவான் படத்தின் சீன்களிலோ மேக்கிங்கிலோ வேறு எந்த படத்தின் வாடையும் அடிக்கவில்லை. வேண்டுமென்றே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் வரவேண்டும் என்பதற்கா வேறு படங்களிலிருந்து அட்லீ சுட்டுவிட்டார் என்று தகவல்களை பரப்புகிறார்கள் என அட்லீ ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











