Soori: கனிமொழி எம்.பியைப் பார்க்க பாதையில் நின்ற சூரி.. ஓரம் போங்க என தள்ளிய நபர்.. என்ன ஆச்சு?
சென்னை: வேல்ஸ் என்டர்டைமெண்ட் நிறுவனத்தின் உரிமையாளர், தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்ஷின் மகள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த திருமண விழாவில் தமிழ் திரையுலகின் பெரிய நடிகர்களில் இருந்து வளர்ந்து வரும் நடிகர்கள் வரை பலரும் கலந்து கொண்டார்கள். இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த தூத்துக்குடி எம்.பி கனிமொழி வந்தார். அவர் வருவதை அறிந்த நடிகர் சூரி, அவரைச் சந்திக்க பாதையில் நின்றார். இந்நிலையில் கனிமொழி எம்.பி வருகிறார் என ஒருவர் சூரியை பாதியில் இருந்து விலக்க தள்ளியுள்ளார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்படும் சம்பவமாக மாறியுள்ளது.
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் ப்ரீத்தா மகள் திருமண விழா கடந்த வாரத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. இவர்களின் திருமண நிகழ்ச்சிக்கு மொத்த திரையுலகமும் திரண்டு வந்து வாழ்த்தியது. அவர்களின் திருமணத்திற்கு தனது தோழியுடன் வந்த ரவி மோகன் குறித்து பஞ்சாயத்து தனியாக ஓடிக்கொண்டு உள்ளது, சென்னையில் உள்ள ஸ்டார் ஹோட்டலான லீலா பேலஸில் நடைபெற்றது. கிட்டத்தட்ட பல கோடிகள் செலவு செய்து இந்த திருமணத்தை மிகவும் பிரமாண்டமாக நடத்தியுள்ளார், ஐசரி கணேஷ்.

1000 பவுன் வரதட்சணை: மகளுக்கு வரதட்சணையாக மட்டும் சுமார் 1000 பவுன் தங்க நகைகளை அளித்துள்ளார் என்ற தகவலும் திரைத்துறையில் உலா வந்தது. மேலும் அவர் தனது மகளுக்கு திருமணத்திற்கு பல கோடிகள் செலவு செய்து பல்வேறு, பரிசுப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.இந்நிலையில் இவரது மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி வந்திருந்தார். கனிமொழி மணமக்களை வாழ்த்தி விட்டு புறப்படும் நேரத்தில் நடிகர் சூரி, வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹோட்டலுக்குள் வருகிறார். கனிமொழி எம்.பி வருவதை அறிந்த அவர், அவரைப் பார்த்து நலம் விசாரிக்கவும், வணக்கம் சொல்லவும் பாதையில் நின்றார்.

தள்ளப்பட்ட சூரி: கனிமொழி எம்.பி வருகிறார் என கூட்டத்தை விலக்கி விட்டுக் கொண்டிருந்த நபர், சூரி நின்று கொண்டு இருந்ததைப் பார்க்காமல் அவரையும் ஓரம் போங்க என்று தள்ளினார். சூரியும் இரண்டு மூன்று அடிகள் பின்னால் நகர்ந்தார். அதன் பின்னர் அவர் நடிகர் சூரி என்று தெரிந்த பின்னர் விட்டுவிட்டார். அதற்குள் கனிமொழி எம்.பி சூரியை அடையாளம் கண்டுவிட்டார். அதன் பின்னர் இருவரும் மாறி மாறி வணக்கம் தெரிவித்துக் கொண்டு நலம் விசாரித்துக் கொண்டனர். இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மாமன் படம்: நடிகர் சூரி நடிப்பில் வரும் 16ஆம் தேதி மாமன் என்ற படம் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் கதையை சூரி எழுதியுள்ளார். மேலும் இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். படத்தில் ராஜ்கிரண், நடிகை ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் கதையை தனது சொந்த வாழ்க்கையில் இருந்து தான் எழுதி உள்ளதாக சூரி நமது பிலிமி பீட் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











