சினிமா பிரபலங்கள் எல்லாம் அன்புச் செழியன் பக்கம் திரும்புகிறார்களே.. என்னதான் நடக்கிறது?
சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலையில் குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சில சினிமா பிரபலங்கள் பேசி இருக்கின்றனர்.
சென்னை: சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலையில் குற்றச்சாட்டப்பட்டு இருக்கும் அன்புச் செழியனுக்கு ஆதரவாக சில சினிமா பிரபலங்கள் பேசி இருக்கின்றனர். நடிகை தேவயானி, நடிகர் மனோ பாலா, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் அன்புச் செழியனுக்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளனர்.
இயக்குநர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் சென்னையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட இவர் தன் தற்கொலை குறித்து கடிதம் எழுதி வைத்துள்ளார். அவர் தனது கடிதத்தில் தன் மரணத்திற்கு அன்புச் செழியன்தான் காரணம் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த நிலையில் அன்புச் செழியனுக்கு எதிராக கோலிவுட்டில் பலரும் கருத்து தெரிவித்து இருந்தனர். தற்போது அன்புச் செழியனுக்கு ஆதரவாகவும் சிலர் பேசியுள்ளனர்.
நடிகை தேவையானி இதுகுறித்து பேசும்போது ''அன்புச் செழியன் என்னைப் பார்க்காமலே, சந்திக்காமலேயே பணம் கொடுத்தவர். அவர் ரொம்ப கண்ணியமானவர். என்னிடம் எப்போதும் கண்ணியமாக நடந்து கொண்டார்'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
அதேபோல் நடிகர் மனோபாலா ''அன்புச் செழியன் இல்லையென்றால் நான் இல்லை. அசோக்குமார் மறைவு பெரும் சோகம்'' என்று பேசியுள்ளார்.
மேலும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ''ஒருவரின் மறைவை வைத்து, மற்ற பலர் சுயநல ஆதாயம் தேடப் பார்க்கிறார்கள். பைனான்சியர்கள் இல்லை என்றால் சினிமா இல்லை'' என்று அன்புச் செழியனுக்கு ஆதரவாக பேசியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











