என்ன வேணாலும் பேசலாம்னு நினைக்கிறாங்க.. தன்னை விமர்சித்தவர்களை கிழித்து தொங்கவிட்ட ரெஜினா!

சென்னை: கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா கசன்ட்ரா.

Recommended Video

OTTக்கு போனா படங்கள் யார் பண்ணுவாங்க, ஏன் நடிக்கணும்னு கேக்கறாங்க! | Regina Cassendra *Kollywood

தமிழ், கன்னடம், தெலுங்கு என பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை ரெஜினா.

சோசியல் மீடியாவில் தன்னை விமர்சித்தவர்களை பற்றி மனம் திறந்து கூறியுள்ளார் ரெஜினா.

சிவகார்த்திகேயனுடன் இணைந்து

சிவகார்த்திகேயனுடன் இணைந்து

கண்ட நாள் முதல் படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை ரெஜினா .

அழகிய அசுரா,கேடி பில்லா கில்லாடி ரங்கா, சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இதில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படம் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

சக்ரா பாராட்டு

சக்ரா பாராட்டு

அதுமட்டுமில்லாமல் விஷாலுடன் இணைந்து நடித்த சக்ரா திரைப்படமும், நெஞ்சம் மறப்பதில்லை, கசடதபற போன்ற அனைத்து படங்களும் இவருக்கு நல்ல படங்களாகவே அமைந்தது. குறிப்பிட்ட சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ரெஜினா. தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் கருணாகாப்பியம் திரைப்படம் வெளிவர உள்ளது. மேலும் சூர்ப்பனகை திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடிகர் ரெஜினா தொல்பொருள் ஆய்வாளராக நடித்து வருகிறார்.

ஃபிங்கர் டிப் 2

ஃபிங்கர் டிப் 2

நடிகை ரெஜினா நடித்து வெளியான ஃபிங்கர் டிப் சீசன் 2, ஜி5ல் வெளியாகியுள்ளது.. இந்த வெப் தொடரில் நடிகர் பிரசன்னா, அபர்ணா பாலமுரளி, போன்ற பலரும் நடித்துள்ளனர். இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. எப்பொழுதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நடிகர் ரெஜினா, தற்போது தன்னையும் தன்னை போல் பல நடிகைகளை மோசமாக விமர்சிப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,"மஞ்சள் நிறத்தில் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். இதை பார்த்த நெட்டிசன்(பெண்) ஒருவர், இந்த புகைப்படத்தில் நீங்கள் பார்ப்பதற்கு மிகவும் மோசமாக இருக்கிறீர்கள், குண்டாகவும் இருக்கிறீர்கள். இனி மேல் உங்களால் உடலை குறைக்க முடியாது என்று கமெண்ட் செய்துள்ளார்.

கிரிட்டிசைஸ் பண்ணாதீங்க

கிரிட்டிசைஸ் பண்ணாதீங்க

இந்த பதிவை ரெஜினா கவனிக்க கூட இல்லையாம். ஆனால் ரெஜினாவின் தோழி இதை கவனித்து பதிலுக்கு பதிவிட்டுள்ளார்," அவராவது தன் வாழ்க்கையில் ஏதாவது ஒன்று செய்து கொண்டிருக்கிறார் ,நீங்கள் மோசமாக கமெண்ட் செய்வதை விட வேற என்ன செய்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்து அவரும் ரிப்ளை செய்ய, மாற்றி மாற்றி பேசிக்கொண்டே இருந்துள்ளனர். இதனை பார்த்த நடிகை ரெஜினா சோசியல் மீடியாவில் என்ன வேண்டுமானாலும் பேசலாம், எப்படி வேணாலும் கமெண்ட் செய்யலாம் என்று பலர் நினைக்கின்றனர். எனக்கு மட்டுமல்ல பல நடிகைகளுக்கு இதுபோல் மோசமான கமெண்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. யார் யாரை வேண்டுமானாலும் கிரிட்டிசைஸ் பண்ணலாம் என்று நினைக்காதீர்கள் என்று கூறியுள்ளார் ரெஜினா. இவர் பேசிய வீடியோவும் அவர் பதிவிட்ட அந்த புகைப்படமும் தற்போது சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X