Kanguva: Sorry சூர்யா.. இத நாங்க சொல்லியே ஆகனும்.. உங்களுக்கு கூடவா இதெல்லாம் தெரியல?

சென்னை: சூர்யா, தீஷா பதானி, ரோபோ சங்கர், ரெடின் கிங்ஸ்லி, கே.எஸ். ரவிக்குமார், நட்டி கருணாஸ், கோவை சரளா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ள படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் நேற்று அதாவது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது என்பதை விடவும் படக்குழு ஏற்படுத்தியிருந்தது. ஆனால் படம் படக்குழு கொடுத்த பில்டப்புக்கு முற்றிலும் நேர் எதிராக இருந்ததால் ரசிகர்கள் பெரும் அதிருப்திக்கு ஆளானார்கள். மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இந்தப் படம் தியேட்டரில் சூர்யா படம் ரிலீஸ் ஆவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் படத்தில் கதைத் தெளிவு, திரைக்கதை நேர்த்தி, கச்சிதமான பின்னணி இசை, புல்லரிக்க வைக்கும் காட்சிகள், ரசிகர்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு வரவழைக்கும் காட்சிகள் என படத்தில் எதுவுமே இல்லை. குறிப்பாக ஒரு படம் தோல்விப் படமாக மாறுவதற்கு யாரோ ஒருவரைக் காரணமாக சொல்லலாம். ஆனால் கங்குவா படத்தினைப் பொறுத்தவரையில் ஒட்டுமொத்த படக்குழுவுமே சரியான சொதப்பல் செய்துள்ளார்கள் எனக் கூறும் அளவிற்கு படம் உள்ளது.

suriya kanguva

சூர்யா போன்ற கைதேர்ந்த குறிப்பாக தேசிய விருது வாங்கிய நடிகர், தான் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் இவ்வளவு தரமற்றதாக அல்லது பெரும் விமர்சனத்திற்கு ஆளாக்கூடிய படத்தினை, " இந்தியாவே வாயைப் பிளந்து கொண்டு பார்க்கும்" என எப்படிக் கூறினார்? இதுமட்டும் இல்லாமல், கங்குவா படத்தினை ரசிகர்களிடம், " நெருப்பு மாதிரி ஒரு படம் வந்து கொண்டு உள்ளது" என எதை வைத்துக் கூறினார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. இப்படி சூர்யாவை நோக்கி சில கேள்விகளை முன்வைக்க வேண்டியுள்ளது. குறிப்பாக படத்தில் கன்டினுட்டி எரர், லாஜிக்கல் எரர் என படம் முழுவதும் குவிந்து காணப்படுகின்றது.

suriya kanguva

ஃப்ரான்சிஸ் போர்ஷன் கேள்விகள்:

ரஷ்யாவில் இருக்கும் சின்னப் பையன் ஜீடா எப்படி இந்தியாவுக்கு வந்தான்? ரஷ்யாவில் ரயில் ஏறிய சின்னப் பையன் இந்தியாவுக்கு எதில் வந்தான்? அதாவது விமானத்திலா? கப்பலிலா? எப்படி அவன் இந்தியா வந்தான்?

சின்னப் பையனை மீட்க ரஷ்யாவில் இருந்து ஹெலிஹாப்ட்டரில் வந்தவர்கள், கோவாவில் தரை இறங்கியதும் கண்மூடித்தனமாக சுடுவது ஏன்? ரஷ்யர்களை எதிர்த்து எத்தனைபேர் சுட்டார்கள்? எதற்காக கார்கள் பறக்கும் அளவுக்கு ரஷ்யர்கள் சுட்டார்கள்? அதற்கானத் தேவை எங்கிருந்து வந்தது?

கோவாவில் தரையிறங்கிய ரஷ்ய விமானங்கள் இந்திய விமானப் படையிடம் அனுமதி பெற்று தரையிறங்கியதா? அல்லது சட்டவிரோதமாக தரையிரங்கிய ரஷ்யர்களை இந்திய ராணுவம் கண்டுபிடித்ததா?

suriya kanguva

ரஷ்யாவில் இருந்து ஹெலிகாப்ட்டரில் வந்த படையினர் ஏன் ஹெலிகாப்ட்டரிலேயே திரும்பிச் செல்லவில்லை? அவர்களுக்கு எங்கிருந்து மருத்துவ உபகரணங்களுடன் கார் எப்படி வந்தது? யார் கொண்டு வந்தார்கள்? அவர்கள் ஏன் அந்த வாகனத்தில் செல்ல வேண்டும்?

சூர்யாவை துப்பாக்கியால் சுட்ட பின்னரும் அவர் எப்படி இயல்பாகவே சண்டை செய்கின்றார்? விமானத்தில் துப்பாக்கியால் சூர்யா சுடும்போதும், ரஷ்யர்கள் சுடும்போதும் விமானத்திற்கு எதுவுமே ஆகவில்லையே ஏன்?

2024ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவராக இருக்ககூடிய உங்கள் படத்தில் இடம் பெரும் ஒரு பாடலில், நடிகையை நீச்சல் உடையில் ஷிங்கிள் ஷாட்களில் காட்டுவதற்கு நீங்கள் மறுப்பே தெரிவிக்கவில்லையா?

2024ஆம் ஆண்டில் கே.எஸ். ரவிக்குமார் கையில் எப்படி 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளது?

suriya kanguva

கங்குவா போர்ஷன் கேள்விகள்:

முதலில் எதற்காக கதாபாத்திரங்கள் கத்திக் கொண்டே இருக்கின்றன? ஏன் கத்துகின்றார்கள்? எதற்காக கத்துகின்றார்கள்? படம் முழுவதும் கத்திக் கொண்டே இருந்தால் ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தும் என உங்களுக்குத் தெரியலையா?

படத்திற்கு டப்பிங் கொடுக்கும்போது நீங்கள் கத்திக் கொண்டே இருப்பதாக உங்களுக்குத் தோன்றவில்லையா? அல்லது, நீங்கள் படம் பார்க்கும்போது படம் முழுவதும் கத்திக் கொண்டு இருப்பது உங்களுக்கு எரிச்சலைக் கொடுக்கவில்லையா?

எப்படியும் படத்தின் பின்னணி இசைக்கோர்ப்புப் பணிகள் முடிந்த பின்னரும் படத்தை ஒருமுறையாவது நீங்கள் பார்த்திருக்ககூடும். அப்படி இருக்கும்போது பின்னணி இசை இரைச்சலாக மட்டுமே இருப்பதாக உங்களுக்கு தோன்றவில்லையா?

suriya kanguva

பொடுவா கதாபாத்திரம் கங்குவாவிற்காக உயிர்தியாகம் செய்யும்போது, வில்லன் சூர்யாவின் கழுத்தை நெறுக்கிக் கொண்டு இருப்பார், ஆனால் பொடுவா உயிர்த்தியாகம் செய்வதைப் பார்த்து, கங்குவா அழும் வரை வில்லன் கதாபாத்திரம் என்ன செய்துகொண்டு இருந்தது?

ஏற்கனவே முன்பகையில் இருக்கும் இரண்டு இனக்குழுக்களுக்குள்ளான போரினைப் மைய்யப்படுத்தும் கதைக்கு ரோமானியர்கள் எதற்கு?

கடைசியாக வரும் கார்த்தி கதாபாத்திரம் ஒருமுறை சிரித்தால் 4,5 பற்கள் சிவப்பு நிறத்தில் உள்ளது. ஒருமுறை 2 பற்கள் மட்டும் சிவப்பு நிறத்தில் உள்ளது. இது கார்த்திக்கு போடப்பட்ட மேக்கப்பில் பிரச்னையா?

suriya kanguva

இப்படி பல கேள்விகள் கங்குவா படத்தினைப் பார்த்தவர்கள் மத்தியில் இருக்கின்றது. கதையிலும் திரைக்கதையிலும் இவ்வளவு ஓட்டைகள் இருக்கும்போது 3டி தொழில்நுட்பம் குறித்து சொல்லவே வேண்டாம். படத்தினை 2டி தொழில்நுட்பத்தில் பார்த்ததைப்போல ஃபிளாட்டாகவே இருந்தது என ரசிகர்கள் புலம்பித் தள்ளும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவிவருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X