அட கடவுளே.. இதுவுமா.. பார்ன் ஸைட்டில் பரவும் வெப் சீரிஸ் காட்சிகள்.. கொதிக்கும் நடிகர் நடிகைகள்!
சென்னை: வெப் சீரிஸின் சில காட்சிகள் பார்ன் ஸைட்டில் பரவி வருவதாக நடிகர் நடிகைகள் கொந்தளித்துள்ளனர்.
வெப் சீரிஸ்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சினிமாக்களில் சொல்லப்படாத சொல்ல முடியாத பல விஷயங்களும் வெப்சீரிஸ்களில் தைரியமாக சொல்லப்படுகிறது.
இதனால் வெப் சீரிஸ்களுக்கான வரவேற்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதுஅ. வெப் சீரிஸ்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து முன்னணி நடிகைகள் நடிகர்கள் பலரும் அவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.

பார்ன் சைட்டுகளில்..
இந்நிலையில் டி கோட் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட வெப் சீரிஸின் பல அந்தரங்கக் காட்சிகள் உல்லு என்ற ஆப்பில் இருந்து திருடப்பட்டு பார்ன் சைட்டில் ஒளிபரப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சினிமாவுக்காக எடுக்கப்பட்ட பல தைரியமான காட்சிகள் பார்ன் சைட் எனப்படும் 18வயது நிரம்பிய இளைஞர்கள் பார்க்கும் வலைதளங்களில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் கொள்ளையர்கள்
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆப் பயன்பாட்டாளர்கள் இதுபோன்ற சூழ்நிலைகளை தங்களால் கையாள முடியவில்லை என்று கூறியுள்ளனர். இதுபோன்ற அனைத்து காட்சிகளும் சைபர் கொள்ளையர்களால் தங்களுக்குத் தெரியாமல் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அதேபோல் பிளாக்பஸ்டர் திரைப்படங்கள் ஆன்லைனில் சட்டவிரோதமாகக் கிடைப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

தடுக்க முடியவில்லை
மேலும் டிகோட் வெப் சீரிஸ் தயாரிப்பாளர்கள் தங்களின் படைப்பை பாதுகாக்க முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய உல்லுவின் தலைமை நிர்வாக அதிகாரி விபு அகர்வால் இதுபோன்ற சூழ்நிலையை தங்களால் தடுக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

தவறான சைட்ஸ்
சில கன்டென்ட்களை பைரேட்ஸ் ஹேக் செய்து, எடுத்து தவறான இடங்களில் போஸ்ட் செய்ய ஒரு குறிப்பிட்ட இலக்கைக் கொண்டுள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க ஒரு ஐடி குழு வேலை செய்கிறது, ஆனால் இந்த விஷயங்கள் நடைமுறையில் தடுத்து நிறுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஆன்லைனில் கசிவு
மேலும் ஒரு பெரிய படம் வெளியான உடன் அவை ஆன்லைனில் ரிலீஸாவதை தடுக்க முடியாததை போல இவையும் ஆன்லைனில் கசிய தொடங்கிவிட்டது என்றும் விபு அகர்வால் தெரிவித்திருக்கிறார்.

வாய்ப்பு கிடைக்காது
வெப் சீரிஸில் நடித்துள்ள புதுமுக நடிகையான காஜல் தான் நடித்த காட்சிகள் பார்ன் வெப்ஸைட்டில் வந்திருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். மேலும் "இது திரைவன்கொடுமை" என்றும் கூறும் அவர், தான் சிறிய நகரமான எட்டாவாவிலிருந்து வந்திருப்பதாகவும், இதனால் எனக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது சாத்தியமில்லை என்றும் கவலையுடன் தெரிவித்திருக்கிறார்.

35 மில்லியனுக்கும் அதிகம்
தன்னுடைய காட்சிகளுக்கு ஒரு தளத்தில் மட்டும் ஐந்து மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் வந்திருப்பதாக தெரிவித்துள்ள காஜல் சராசரியாக எனது நெருக்கமான காட்சி ஆன்லைனில் சட்டவிரோதமாக 35 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

தடுக்க வேண்டும்
படங்களுக்காக தைரியமாக எடுக்கப்படும் இதுபோன்ற காட்சிகள் பார்ன் ஸைட்டுகளில் வெளியிடப்படுவதால் தங்களின் கேரியரை காலியாவதாக கூறியுள்ள அவர் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











