நாங்க பிரிய மாட்டோம்... ஆதாரம் காட்டிய விக்னேஷ் சிவன் -நயன்தாரா ஜோடி

சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஜோடி கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இணைந்தும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் மனஸ்தாபம் வந்து இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வருகின்றன.

ஆனால் இதை மறுக்கும் வகையில் இவர்களது சமீபத்திய செயல்பாடுகள் காணப்படுகின்றன.

5 ஆண்டு காதல்

5 ஆண்டு காதல்

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். ஆரம்பத்தில் தங்களது நட்பை மறுத்துவந்த இவர்கள் இருவரும் தொடர்ந்து இருவரும் இணைந்துள்ள புகைப்படங்களை வெளியிட்டு அதை ஒப்புக் கொண்டனர்.

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்

வெற்றிப்படம் கொடுத்த இயக்குநர்

நயன்தாராவை வைத்து நானும் ரவுடிதான் என்ற படத்தை இயக்கி வெற்றிப்படமாக்கிய விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா மூவரையும் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். கொரோனா பாதிப்பால் இந்த படத்தின் சூட்டிங் தற்போது தடைப்பட்டுள்ளது.

பிரிந்து விட்டதாக செய்தி

பிரிந்து விட்டதாக செய்தி

இந்நிலையில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் பிரிந்து விட்டதாக கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. இதுகுறித்து இருவரும் எந்த கருத்தையும் வெளிப்படுத்தாமல் மௌனமாக இருந்து வந்தனர்.

பாடல் குறித்து பாராட்டு

பாடல் குறித்து பாராட்டு

இந்நிலையில் தற்போது நயன்தாரா நடிப்பில் உருவாகிவரும் நெற்றிக்கண் படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார் விக்னேஷ் சிவன். சில பாடல்கள் நம்மிடம் நீண்ட நாட்கள் இருக்கும் என்றும் இந்த பாடல் அத்தகைய பாடலாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பாடலை அனைவருக்கும் ஷேர் செய்ய காத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

பாடல் குறித்து அப்டேட்

பாடல் குறித்து அப்டேட்

இதனிடையே நடிகை நயன்தாராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் ஒரே நேரத்தில் படத்தின் பாடல் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ள நிலையில், அவர்கள் பிரிவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி கொடுத்துள்ளனர்.

பார்வையற்றவராக நயன்தாரா

பார்வையற்றவராக நயன்தாரா

மிலிந்த் ராவ் இயக்கத்தில் உருவாகிவரும் நெற்றிக்கண் படத்தில் பார்வையில்லாதவராக நடித்துள்ளார் நயன்தாரா. விக்னேஷ் சிவன் தயாரிப்பில் இந்த படம் உருவாகியுள்ளது. ரஜினியின் படத்தின் தலைப்பான நெற்றிக்கண்ணை அந்த படத்தின் இயக்குநரின் அனுமதி பெற்று பயன்படுத்தியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X